“ஆபரேஷன் பிரம்மா'”.. மியான்மர் மக்களுக்காக கரம் கொடுத்த இந்தியா.. முதல் நாடாக களத்தில் இறங்கியது!
டெல்லி: 'ஆபரேஷன் பிரம்மா' என்ற பெயரில் மியான்மருக்காக கைகொடுத்துள்ளது இந்தியா. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மர் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உலக நாடுகளிலேயே முதல் நாடாக, மியான்மருக்கு நிவாரண பொருட்களை கொண்டு சேர்த்துள்ளது இந்தியா.
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் மோனிவா நகருக்கு அருகே நேற்று (மார்ச் 28) காலை 11.50 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் மியான்மர் நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவானது.

மியான்மர் நிலநடுக்கம்
முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த 10 நிமிடத்தில் அங்கு 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது. மியான்மரின் சாகாயிங் நகரின் வடமேற்கே 16 கி.மீ தொலைவிலும், 10 கி.மீ ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து, 4 முறை லேசான அதிர்வுகள் ஏற்பட்டன.
அடுத்தடுத்து அதிர்வுகள் ஏற்பட்டதால், மியான்மர் நாட்டின் மண்டலே நகரில் உள்ள மசூதிகள், வீடுகள் இடிந்து விழுந்தன. அங்குள்ள பழமையான அரண்மனையும் இடிந்து விழுந்தது. இந்நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை இன்னும் உயருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
1000க்கும் அதிகமானோர் பலி
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் தென்கிழக்கு ஆசிய பகுதியில் உள்ள தாய்லாந்து, மலேசியா, வங்கதேசம், லாவோஸ், வியட்நாம் சீனா மட்டுமின்றி, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டது. தாய்லாந்து நாட்டிலும் நிலநடுக்கத்தால் பலர் உயிரிழந்துள்ளனர்.

ஆபரேஷன் பிரம்மா
மியான்மர், தாய்லாந்தில் பூகம்பத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ள நிலையில் நமது இந்திய அரசு 'ஆபரேஷன் பிரம்மா' என்ற பெயரில் முதல் கட்டமாக மியான்மருக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உறைவிடங்கள் இழந்த மக்கள் மீண்டெழ வசதியாக கூடாரங்கள், அத்தியாவசிய மருந்துகள் என 15 டன் அளவிலான பொருட்களை இந்திய விமானப் படையின் C130J விமானம் மூலம் மியான்மருக்கு கொண்டு சேர்த்துள்ளது இந்தியா.
உத்தர பிரதேச மாநிலம் ஹிண்டன் விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படையின் IAF C 130J விமானத்தில் அனுப்பப்பட்ட முதல் கட்ட நிவாரணப் பொருள்கள் மியான்மர் சென்றடைந்தன. அங்கு மியான்மர் அதிகாரிகள் மற்றும் மியான்மர் நாட்டிற்கான இந்திய தூதர் உள்ளிட்டோர் நிவாரண பொருட்களை பெற்றுக்கொண்டனர்.
களத்தில் இறங்கிய முதல் நாடு இந்தியா
மியான்மருக்கு உலக நாடுகளிலேயே முதல் நாடாக உதவிக்கரம் நீட்டி இருப்பது இந்தியா தான். இந்தியாவில் இருந்து சென்றுள்ள பேரிடர் மீட்புக் குழு நாளை அதிகாலை மண்டலே நகருக்குச் செல்லும், மேலும் மீட்பு நடவடிக்கைகளுக்காக மண்டலேவை அடையும் முதல் மீட்புக் குழு இந்தியாவின் NDRF மீட்புக் குழு என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி உறுதி
இதற்கிடையே மியான்மரின் ராணுவ ஆட்சித் தலைவரான மின் ஆங் ஹ்ளெய்ங்கிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாகப் பேசினார். இது குறித்து பிரதமர் மோடி தமது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "மியான்மர் ராணுவத் தலைவர் சீனியர் ஜெனரல் மின் ஆங் ஹ்ளெய்ங்குடன் பேசினேன். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்காக ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்து கொண்டேன். மியான்மரின் நட்பு தேசம், அண்டை நாடு என்ற வகையில் இந்தக் கடினமான நேரத்தில் இந்தியா மியான்மர் மக்களுடன் தோளோடு தோள் நிற்கும் என்று உறுதியளித்தேன்." எனத் தெரிவித்துள்ளார்.
-
"எல்லை மீறி போறீங்க.." டெல்லி சாலைகளில் ஓடும் டிரம்ப் ஆட்டோக்கள்.. அப்படி என்ன காரணம் தெரியுமா? -
நீ கைய குடு பங்கு! அமெரிக்கா முட்டி மோத.. சத்தமில்லாமல் இந்தியா பார்த்த வேலை! தோள் கொடுத்த ரஷ்யா! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம்












Click it and Unblock the Notifications