"Suicide Drones".. பாகிஸ்தானை திணறடித்த இந்தியாவின் நவீன பிரம்மாஸ்திரம்! அதென்ன லாய்ட்டரிங் ஏவுகணை?
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் உள்ளே தாக்குதல்களை நடத்த இந்தியா சுசைட் ஏவுகணைகள் எனப்படும் "Suicide Drones" ஆயுதங்களை பயன்படுத்தி உள்ளன. இதை loitering munitions என்பார்கள். அதாவது இங்கும் அங்கும் மாறி மாறி மிதந்து சென்று அதன்பின்னர் தாக்கும் ஏவுகணைகள்.
நீங்கள் ஏவுகணை தாக்குதல் வீடியோக்களை பார்த்து இருக்கலாம். அதில் ஒரு டார்கெட் செய்யப்பட்டால்.. அது நேரடியாக சென்று தாக்கும். ஆனால் ஒரு ஏவுகணை பறந்து செல்கிறது. அதில் டார்கெட் கொடுக்கப்படவில்லை. மாறாக பறந்து செல்லும் போதே டார்கெட்டை கண்டுபிடிக்கிறது. இதற்காக அந்த ஏவுகணை இங்கும் அங்கும் நகர்ந்து செல்கிறது.
அதாவது அதில் இருக்கும் கேமராக்கள், சென்சார்கள் மூலம் தீவிரவாத கேம்ப் கண்டுபிடிக்கப்படுகிறது. ஒரு ஆள் இல்லாத டிரோன் போல தீவிரவாத கேம்ப்பை இதை கண்டுபிடிக்கிறது. அப்படி கண்டுபிடித்த பின் இந்த ஏவுகணை அங்கே விழுந்து வெடிக்கிறது என்றால் எப்படி இருக்கும். இதுதான் "Suicide Drones".
அதாவது ஒரே சமயத்தில் ட்ரோன் போல பறந்து டார்கெட்டை கண்டுபிடித்து அதன்பின் அங்கேயே விழுந்து ஏவுகணை போல அட்டாக் செய்யும் என்பதால் இதை "Suicide Drones" என்கிறார்கள்.

இந்தியாவில் Nagastra-1 எனப்படும் "Suicide Drones" உள்ளது. இதைத்தான் இன்று தாக்குதலில் பயன்படுத்தி உள்ளனர். இது சிறிய அளவில் இருந்தாலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இதைத்தான் பாகிஸ்தான் உள்ளே இந்தியா பயன்படுத்தி உள்ளது.
இந்த முறை இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தளங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடித்தியது இந்திய ராணுவம். அங்கு தீவிரவாத முகாமக்கள் மட்டும் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன.. ஏவுகணைகள் உள்ளே சென்று தாக்கி உள்ளன. ஆனால் பாகிஸ்தானால் இதை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படியே கண்டுபிடித்தாலும் அதை மறித்து தடுக்க முடியவில்லை.
அதாவது இந்தியாவின் ஏவுகணைகளை மறித்து பாகிஸ்தானால் தாக்க முடியவில்லை. இது பாகிஸ்தானின் மிகப்பெரிய வீக்னஸ் ஆகும். பாகிஸ்தானால் இந்திய ஏவுகணைகளை ரேடாரில் காண முடியவில்லை. இல்லையென்றால் அப்படியே பார்த்தாலும் அதை தடுக்கும் திறன் இல்லை என்பது தெளிவாகி உள்ளது.
பாகிஸ்தான் மீது அட்டாக்
பாதுகாப்பு துறையால் ஆபரேஷன் சிந்தூர் என்று இந்த தாக்குதலுக்கு பெயரிடப்பட்டு உள்ளது. இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தளங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடித்தியது இந்திய ராணுவம்.
அங்கு தீவிரவாத முகாமக்கள் மட்டும் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற குறியீட்டுப் பெயரில் இரவு நேர துல்லியத் தாக்குதல்களில் மொத்தம் ஒன்பது தளங்கள் ரேடாரில் துல்லியமாக குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டன.
இந்தியாவிற்கு உள்ளே இருந்தே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அதாவது இந்தியாவில் இருந்தே ஏவுகணைகள் மூலம் 9 இடங்கள் தாக்கப்பட்டு உள்ளன. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். இதில் பாகிஸ்தான் ராணுவ பகுதிகள் எதுவும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட வில்லை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications