இந்த மேப்பை பாருங்க! எல்லாம் புரியும்! பாகிஸ்தான் உள்ளே.. இந்தியா குறிவைத்து தாக்கிய இடங்கள் இவைதான்
டெல்லி: பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் ஐந்து இடங்களில் இந்தியாவின் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
இந்த முறை இந்தியாவில் இருந்தே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அதாவது இந்தியாவிற்கு உள்ளே இருந்தே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் இருந்தே ஏவுகணைகள் மூலம் 9 இடங்கள் தாக்கப்பட்டு உள்ளன. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம்.

அந்த இடங்கள் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. கோட்லி, அகமதுபூர் கிழக்கு, முசாபராபாத், பாக் மற்றும் முரிட்கே ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளன. இவற்றில், அகமதுபூர் கிழக்கு மற்றும் முரிட்கே ஆகியவை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள இடங்கள் ஆகும்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்கினால் வேலைக்கு ஆகாது. பாகிஸ்தான் பஞ்சாப்பில் தாக்க வேண்டும். சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் சிந்துவில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்கினால் வேலைக்கு ஆகாது. பாகிஸ்தான் பஞ்சாப்பில் அடிக்காத வரை, ராவல்பிண்டியில் அடிக்காத வரை எதுவும் ஆகாது. அதற்கெல்லாம் நம்மிடம் பவர் இருக்கிறது.
இதையடுத்தே இந்தியா துல்லியமாக பாகிஸ்தான் உள்ளே.. முக்கியமாக பாகிஸ்தான் பஞ்சாபில் இந்த தாக்குதல்களை நடத்தி உள்ளது. அங்கே உள்ள பயங்கரவாத தீவிரவாத மீது துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இந்த தாக்குதல் மூலம் 12 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.
ஆபரேஷன் சிந்தூர்:
பாதுகாப்பு துறையால் ஆபரேஷன் சிந்தூர் என்று இந்த தாக்குதலுக்கு பெயரிடப்பட்டு உள்ளது. இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தளங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம்.
அங்கு தீவிரவாத முகாம்களை மட்டும் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற குறியீட்டுப் பெயரில் இரவு நேர துல்லியத் தாக்குதல்களில் மொத்தம் ஒன்பது தளங்கள் ரேடாரில் துல்லியமாக குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டன.
இந்தியாவிற்கு உள்ளே இருந்தே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அதாவது இந்தியாவில் இருந்தே ஏவுகணைகள் மூலம் 9 இடங்கள் தாக்கப்பட்டு உள்ளன. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம்.
இதில் பாகிஸ்தான் ராணுவ பகுதிகள் எதுவும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படவில்லை. . இதற்கு இடையே பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லையில் இந்திய விமானப்படை பெரிய அளவிலான இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது . பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த தாக்குதல் மூலம் 12 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்
தீவிரவாத முகாம்கள் மட்டுமே குறி வைக்கப்பட்டு உள்ளன. முக்கியமாக லஸ்கர் இ தொய்ப்பா அமைப்பின் தலைமையிடம் குறி வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு விரைவில் பாகிஸ்தான் ராணுவம் பதிலடி கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் தாக்கப்பட்ட இடங்களின் மேப் லொகேஷன் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.












Click it and Unblock the Notifications