Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாக்., விழும் அடி.. இன்று முதல் வெளிநாடு பயணத்தை தொடங்கிய எம்பிக்கள் குழு.. என்ன செய்வார்கள்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நம் நாட்டின் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து வெளிநாடுகளின் தலைவர்களுக்கு எடுத்து கூறவும், பாகிஸ்தானின் பொய் பிரசாரங்களை முறியடிக்கவும் அமைக்கப்பட்ட 7 எம்பிக்கள் குழுக்களில் 3 குழுக்கள் இன்று பயணத்தை தொடங்குகின்றன.

இந்த குழுக்கள் ஜப்பான், கொரிய குடியரசு, சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், காங்கோ ஜனநாயக குடியரசு, சியரா லியோன், லைபீரியா, ரஷ்யா, ஸ்லோவேனியா, கிரீஸ், லாட்வியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளன. இதில் கனிமொழி தலைமையிலான குழுவும் உள்ள நிலையில் அவர்களின் பெயர் விபரம், அவர்கள் செல்லும் நாடுகள் பற்றிய விபரங்கள் வருமாறு:

operation-sindoor-all-party-delegations-3-teams-head-to-foreign-countries-from-today-and-tomorrow

பஹல்காம் தாக்குதலுக்கு நம் நாடு அதிரடியாக பதிலடி கொடுத்தது. ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் ஏவுகணை, ட்ரோன்களை ஏவி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மற்றும் விமானப்படை தளங்களை தாக்கி நம் நாடு அழித்தது. அதன்பிறகு பாகிஸ்தான் கெஞ்சியதால் நம் நாடு சண்டையை நிறுத்தியது.

ஆனால் பாகிஸ்தான் பொய் பிரசாரங்களை பரப்பி வருகிறது. நம் நாட்டுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பாகிஸ்தான் வெளிநாடுகளிடம் தவறான தகவல்களை வழங்கி வருகிறது. நம் நாடு அப்பாவிகளை குறிவைத்து கொன்றதாகவும், மசூதிகள் மீது தாக்கியதாகவும் அப்பட்டமான பொய்களை பரப்பி வருகிறது பாகிஸ்தான்.

இந்நிலையில் தான் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை என்பது என்ன? பாகிஸ்தானில் எங்கெல்லாம் தாக்குதல் நடத்தப்பட்டது? பாகிஸ்தான் பரப்பும் பொய் உள்ளிட்டவற்றை முறியடிக்க எம்பிக்கள் தலைமையில் மொத்தம் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 3 குழுவினர் இன்றும், நாளையும் வெளிநாடுகளுக்கு புறப்பட்டு செல்ல உள்ளனர்.

இந்த குழுக்கள் ஜப்பான், கொரிய குடியரசு, சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், காங்கோ ஜனநாயக குடியரசு, சியரா லியோன், லைபீரியா, ரஷ்யா, ஸ்லோவேனியா, கிரீஸ், லாட்வியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கும் சென்று ‛ஆபரேஷன் சிந்தூர்' பற்றி அந்த நாடுகளின் தலைவர்களுக்கு எடுத்து கூற உள்ளனர். அதன்படி இன்றும், நாளையும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் எம்பியான சஞ்சய் குமார் ஷா, திமுக எம்பி கனிமொழி, சிவசேனா எம்பி ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே (மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மகன்) ஆகியோரின் குழுக்கள் முதற்கட்டமாக வெளிநாடுகளுக்கு புறப்பட உள்ளனர். இதனை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி உறுதி செய்துள்ளார்.

அதன்படி ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் எம்பியான சஞ்சய் குமார் ஷா தலைமையிலான குழுவில் பாஜக எம்பிக்களன அபராஜிதா சாரங்கி, பிரிஜ் லால், பிரதான் பாரு, ஹேமங்க் ஜோஷி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி ஜான் பிரிட்டஸ் காங்கிரஸின் சல்மான் குர்ஷித், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிசேக் பானர்ஜி, தூதர் மோகன் குமார் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இந்தோனேஷியா, மலேசியா, தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல உள்ளனர்.

திமுக எம்பி கனிமொழி தலைமையிலான குழுவில் சமாஜ்வாதி எம்பி ராஜீவ் ராய், தேசிய மாநாட்டு கட்சி எம்பி மியான் அல்தாப் அகமது, பாஜக எம்பி பிரிஜேஷ் சோவ்டா, ஆர்ஜேடி கட்சியின் பிரேம் சந்த் குப்தா, ஆம்ஆத்மியின் அசோக் குமார் மிட்டல், தூதர்கள் மங்சீவ் எஸ் புரி, ஜாவேத் அஷ்ரப் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் ஸ்பெயின், கிரீஸ், ஸ்லோவேனியா, லத்திவா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல உள்ளனர்.

சிவசேனா எம்பி ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே (மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மகன்) தலைமையிலான குழுவில் பாஜக எம்பிக்களான பன்சுரி ஸ்வராஜ், அதுல் கார்க், மன்னன் குமார் மிஸ்ரா, எஸ்எஸ் அகுல்வாலியா, பிஜேடி கட்சியின் எம்பி சஸ்மித் பாத்ரா, ஐயூஎம்எல் கட்சியின் முகமது பஷீர், தூதர் சுஜான் சினோய் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், லிபேரியா, காங்கோ, சியாரா, லியோன் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல உள்ளனர்.

அதன்பிறகு மற்ற 4 குழுவினர் மே 23ம் தேதி முதல் மே 25ம் தேதி வரை வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளனர். அதன்படி பாஜக எம்பி பைஜெயந்த் பாண்டாவின் குழுவில் பாஜகவை சேர்ந்த எம்பிக்களான நிஷிகாந்த் துபே, பன்னான் கோன்யாக், ரேகா சர்மா, ஏஐஎம்ஐஎம் கட்சியின் அசாதுதீன் ஓவைசி, சத்னம் சிங்க சண்டு, முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், தூதராக இருக்கும் ஹர்ஷ் ஸ்ரிங்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், அல்ஜிரியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல உள்ளனர்.

அதேபோல் பாஜக எம்பி ரவி சங்கர் பிரசாத் தலைமையிலான குழுவில் பாஜகவின் டகுபதி புரண்டேஸ்வரி, சிவசேனா (உத்தவ் அணி) பிரியங்கா சதர்வேதி, குலாம் அலி காட்னா, காங்கிரஸின் அமர் சிங் பாஜகவின் சாமிக் பட்டாச்சாரியா, முன்னாள் அமைச்சர் எம்ஜே அக்பர் தூதர் பங்கஜ் சரண் உள்ளிட்டவர்கள் உள்ளனர். இவர்கள் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐநா, இத்தாலி, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் சசிதரூர் எம்பி தலைமையிலான குழுவில் எல்ஜேபி (ராம்விலாஸ்) கட்சியின் எம்பி ஷாம்பவி, ஜேஎம்எம் கட்சியின் சர்ப்ராஸ் அகமது, தெலுங்கு தேசம் கட்சியின் ஹரிஷ் பாலயோகி, பாஜக எம்பிக்களான ஷஷாங்க்மணி திரிபாதி, தேஜஸ்வி சூர்யா, புவனேஸ்வர் காலிதா, சிவசேனா கட்சியின் மிலின்ட் முர்ளி தியோரா, தூதர் தரன்ஜித் சிங் சண்டு உள்ளிட்டவர்கள் அமெரிக்கா, பனாமா, கயானா, பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல உள்ளனர்.

தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) எம்பி சுப்ரியா சூலே தலைமையிலான குழுவில் பாஜக எம்பி ராஜீவ் பிரதாப் ரூடி, அனுராக் சிங் தாகூர், முரளீதரன், ஆம்ஆத்மி கட்சியின் விக்ரம்ஜித் சிங் சகானி, காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி, ஆனந்த் சர்மா, தெலுங்கு தேசம் கட்சியின் லாவு ஸ்ரீகிருஷ்ணா தேவராயலு, தூதர் சையத்அக்பருதீன், உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் எகிப்து, கத்தார், எத்தியோப்பியா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணிக்க உள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+