இந்தியாவின் வட மாநிலங்களில் விமான சேவை ரத்து.. பாகிஸ்தான் எல்லை நகரங்களில் விமானங்கள் இயங்கவில்லை
சென்னை: இன்று அதிகாலையில் பாகிஸ்தானின் எல்லைக்கு அருகிலுள்ள பல இடங்களில் இந்திய இராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பாகிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள பல்வேறு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரின் முக்கிய விமான நிலையமான ஸ்ரீநகர் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் இருந்து பயணிகள் விமானங்கள் இன்று இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1971ம் ஆண்டுக்கு பிறகு, அதாவது 54 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று படைகளும் இணைந்து பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குலை தொடர்ந்து பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்திய விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் விமானங்களைக் கண்காணிக்கும் Flightradar24 என்ற அமைப்பு. இன்று அதிகாலை ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் வான்வெளியில் விமானங்களே இயங்கவில்லை என்று கூறியுள்ளது.
அதேநேரம் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக அனைத்து முக்கிய இந்திய விமான நிறுவனங்களும் தங்கள் பயணிகளுக்கு விமானங்கள் ரத்து மற்றும் புறப்பாடு மற்றும் வருகையில் ஏற்படக்கூடிய தாமதங்கள் குறித்து தற்போது எச்சரித்துள்ளன. பயணிகள் தங்கள் விமான நிலையை சரிபார்த்து அதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளன.
ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், பூஜ், ஜாம்நகர், சண்டிகர் மற்றும் ராஜ்கோட் ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்கள், அந்த நகரங்களில் இருந்து இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு செல்லும் விமானஙகள் இன்று மதியம் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அமிர்தசரஸுக்குச் செல்லும் இரண்டு சர்வதேச விமானங்களை திரும்பிவிட்டதாக ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.
டாடாவுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் அளித்த விளக்கத்தில், "இப்போது நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மே 7 ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், பூஜ், ஜாம்நகர், சண்டிகர் மற்றும் ராஜ்கோட் ஆகிய நிலையங்களுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களையும் ஏர் இந்தியா ரத்து செய்துள்ளது, அதிகாரிகளிடமிருந்து மறு உத்தரவுகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். பஞ்சாப் மாநிலம் அர்தசரஸுக்குச் செல்லும் இரண்டு சர்வதேச விமானங்கள் டெல்லிக்கு திருப்பி விடப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
வான்வெளியில் மாறிவரும் நிலைமைகள் காரணமாக ஜம்மு, ஸ்ரீநகர், அமிர்தசரஸ், லே, சண்டிகர், தர்மசாலா மற்றும் பிகானீர் ஆகிய இடங்களுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
தர்மசாலா, லே, ஜம்மு, ஸ்ரீநகர் மற்றும் அமிர்தசரஸ் ஆகிய இடங்களில் உள்ள விமான நிலையங்கள் மூடப்படுவதால் புறப்பாடு மற்றும் வருகை பாதிக்கப்படலாம் என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்ரீநகருக்கான அனைத்து விமானங்களையும் ஆகாச ஏர் விமான நிறுவனம் ரத்து செய்துள்ளது.
முன்னதாக இன்று அதிகாலை 1:44 மணிக்கு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களில் இந்தியா துல்லிய தாக்குதல்களை நடத்தியது. 'ஆபரேஷன் சிந்தூர்'- என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை குறி வைத்து 9 இடங்களில் தாக்கியது. பாகிஸ்தான் இராணுவ தளங்கள் எதையும் இந்தியா குறிவைக்கவில்லை.
பவல்பூர், முரிட்கே, சியால்கோட், சகாம்ரு, குல்பூர், பிம்பர், கோட்லி மற்றும் முசாபராபாத் ஆகிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும், சியால்கோட், பஹவல்பூர், சக் அம்ரு மற்றும் முரிட்கே உள்ளிட்ட பாகிஸ்தான் நகரங்களிலும் உள்ள தீவிரவாத முகாம்களையும் மட்டும் துல்லிய தாக்குதலை இந்தியா நடத்தியுள்ளது. முப்படைகள் இணைந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளன.
-
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
ஆடிப்போன அமெரிக்கா! சத்தமின்றி பாகிஸ்தான் செய்த காரியம்.. ஈரான் போருக்கு நடுவே இது வேறயா -
பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி












Click it and Unblock the Notifications