உல்லாச வாழ்க்கை.. பாகிஸ்தானுக்கு உளவாளியாக மாறிய பெண் யூடியூபர் உள்பட 6 பேர் கைது.. பின்னணியில் ஷாக்
டெல்லி: நம் நாட்டில் இருந்து கொண்டு பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து தகவல்களை வழங்கி வந்த பிரபல பெண் யூடியூபர் உள்பட 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் உள்ள பாகிஸ்தானின் தூதரக அதிகாரி ஏற்பட்ட பழக்கத்தை தொடர்ந்து இவர்கள் உளவாளியாக மாறியுள்ளனர். சமீபத்தில் அந்த பாகிஸ்தான் அதிகாரி நம் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் பெண் யூடியூபர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்கமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் பலியாகினர். இதற்கு கடந்த 7 ம் தேதி நம் நாடு பதிலடி கொடுத்தது. ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அளிக்கப்பட்டன. இதையடுத்து இருநாடுகள் இடையே மோதல் அதிகரித்தது.

பாகிஸ்தான் நம்மை தாக்க முயன்றது. இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டதோடு நம் நாடு நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன. இதையடுத்து பாகிஸ்தான் கெஞ்சியதால் நம் நாடு சண்டையை நிறுத்தியது. இப்போது எல்லையில் அமைதி நிலவி வருகிறது.
இந்நிலையில் தான் நம் நாட்டில் இருந்து கொண்டு பாகிஸ்தானுக்கு உளவு தகவல்களை வழங்கியதாக பிரபல பெண் யூடியூபர் உள்பட 6 பேரை உளவுத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. இவர்கள் பாகிஸ்தானின் ராணுவ உளவுப்பிரிவான ஐஎஸ்ஐக்கு உளவு தகவல்களை வழங்கி வந்துள்ளனர். இதில் முக்கியமானவர் ஜோதி மல்கோத்ரா. இவர் பிரபல யூடியூபராக உள்ளார். ‛டிராவல் வித் ஜோ' என்ற பெயரில் யூடியூப் சேனல்வைத்துள்ளார். ஹரியானாவை சேர்ந்த இவர் கடந்த 2023ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு சென்று வந்த பிறகு உளவாளியாக செயல்பட்டு வந்துள்ளார்.
இவர் பாகிஸ்தான் சென்று வந்த நிலையில் இஷான் உர் ரஹீம் என்ற தனிஷ் என்பவருடன் பழகி உள்ளார். இவர் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் மூலம் பாகிஸ்தானின் உளவுத்துறை அதிகாரிகளுடன் ஜோதி மல்கோத்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து உளவு தகவல்களை வழங்கி உள்ளார். சமீபத்தில் இவர் நம் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இவருடன் தொடர்பில் இருந்த ஜோதி மல்கோத்ரா இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
வாட்ஸ்அப், டெலிகிராம், ஸ்நாப்சாட் உள்ளிட்டவற்றின் மூலம் அவர் உளவு தகவல்களைவழங்கி உள்ளார். இந்தியாவின் முக்கிய இடங்கள் பற்றிய விபரம், அதேபோல் முக்கியமான திட்டங்கள் செயல்படுத்தப்படும் இடங்களை பற்றிய விபரங்களை தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்திய வம்சாவளி ஒருவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். அவருடன் சேர்ந்து இந்தோனேசியாவின் பாலி நகருக்கு சென்று வந்துள்ளார். இவர் மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவு 152ன் கீழ் 3, 4, 5 ரகசிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக அவரிடம் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இப்போது இந்த வழக்கு ஹிசார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜோதி மல்கோத்ரா தவிர பஞ்சாப்பை சேர்ந்த கணவரை இழந்த 32 வயது நிரம்பிய பெண்ணான குஜாலா கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் கடந்த 2025ம் ஆண்டில் டெல்லியில் உள்ள பாகிஸ்தானின் தூதரகத்துக்கு விசா விண்ணப்பம் செய்ய சென்றார். அப்போது தூதரக அதிகாரி தனிஷ் உடன் பழக்கம் ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் காட்டி குஜாலாவை நம்ப வைத்து வாட்ஸ்அப் உள்ளிட்டவற்றில் வீடியோ காலில் ஆபாசமாக பேசி வந்துள்ளார். அதன்பிறகு தொடர்ந்து பணம் அனுப்பி உள்ளார்.
அதேபோல் பஞ்சாப்பை சேர்ந்தயாமின் முகமது,ஹரியானாவை சேர்ந்த சீக்கிய மாணவரான தேவேந்தர் சிங் தில்லான், நு பகுதயை சேர்ந்த அர்மன் உள்பட மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications