Independence Day 2025: 36 ஆபரேஷன் சிந்தூர் வீரர்களுக்கு வீரதீரச் செயல்களுக்கான விருதுகள் அறிவிப்பு
டெல்லி: இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், 'ஆபரேஷன் சிந்துர்' நடவடிக்கையில் முக்கிய பங்காற்றிய இந்திய விமானப்படை வீரர்கள் 36 பேருக்கு வீரதீர விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நேற்று வியாழக்கிழமை இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்மூலம், இந்திய விமானப்படை வீரர்களின் தியாகமும், அர்ப்பணிப்பும் அங்கீகரிக்கப்படுகிறது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்தியப் பாதுகாப்புப் படைகள் அழித்தன. இந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 100+ தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்திய ராணுவத்திற்கு மிகப் பெரிய வெற்றியாக இந்த ஆபரேஷன் சிந்தூர் கருதப்படுகிறது.

ஆபரேஷன் சிந்தூர்
இதில் முரிட்கே மற்றும் பஹவல்பூரில் உள்ள தீவிரவாதக் குழுக்களின் தலைமையகங்கள் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டன. இந்த நடவடிக்கையில் முக்கிய பங்காற்றிய பைலட்கள் உட்பட ஒன்பது இந்திய விமானப்படை அதிகாரிகளுக்கு வீர சக்கரா விருது வழங்கப்படுகிறது. இது பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்படும் மூன்றாவது மிக உயர்ந்த வீரதீர விருதாகும்.
விருதுகள் அறிவிப்பு
மேலும், ஒருவருக்கு சௌர்யா சக்கரா விருது வழங்கப்பட்டது. இந்த விருது எதிரியுடன் நேரடியாக மோதாதபோது நிகழ்த்தப்படும் துணிச்சலான செயல் அல்லது தியாகத்திற்காக வழங்கப்படுகிறது. இது அசோக சக்கரா மற்றும் கீர்த்தி சக்கராவுக்கு அடுத்தபடியாக உள்ளது. மேலும், 26 பேருக்கு வாயு சேனா பதக்கம் வழங்கப்படுகிறது. இப்படி மொத்தமாக மொத்தமாக ஆபரேஷன் சிந்தூர் வீரர்களுக்கு 36 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன
வீர சக்கரா விருது பெற்றவர்களில் குரூப் கேப்டன்கள் ஆர்.எஸ். சித்து, மனிஷ் அரோரா, அனிமேஷ் பட்னி, மற்றும் குணால் கல்ரா ஆகியோர் உள்ளனர். விங் கமாண்டர் ஜாய் சந்திரா, ஸ்குவாட்ரன் லீடர்கள் சார்த்தக் குமார், சித்தார்த் சிங், ரிஸ்வான் மாலிக் மற்றும் விமான லெப்டினன்ட் ஏ.எஸ். தாக்கூர் ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.
பஹல்காம் தாக்குதல்
ஆபரேஷன் சிந்துரின் வெற்றிக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.. மே 7ம் தேதி நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்துர், 26 உயிர்களைப் பலி கொண்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இருந்தது. இந்தியப் படைகள் பாகிஸ்தானில் ஊடுருவி ஒன்பது பயங்கரவாத தளங்களை அழித்தன. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கை இந்தியாவின் ராணுவத் திறனை உலகிற்கு எடுத்துக் காட்டியது.
மேலும், விமானப்படை அதிகாரிகளுக்கு 'சர்வோத்தம் யுத் சேவா பதக்கம்' முதல்முறையாக வழங்கப்படுகிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல்களை நடத்தியது. இருப்பினும், இந்திய விமான பாதுகாப்பு அமைப்புகள் இந்த அச்சுறுத்தல்களைத் திறம்பட முறியடித்தன. மே 10ம் தேதி பாகிஸ்தானில் உள்ள முக்கிய ராணுவ மற்றும் ரேடார் தளங்கள் மீதும் இந்தியப் படைகள் தாக்குதல் நடத்தின.
வீரதீர விருதுகள்
இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாததால் பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு வரக் கோரிக்கை விடுத்தது. விமானப்படைத் தலைவர் ஏர் மார்ஷல் ஏ.பி. சிங், இந்த நடவடிக்கையின்போது இந்தியப் படைகள் ஆறு பாகிஸ்தான் விமானங்களைச் சுட்டு வீழ்த்தி, பல எஃப்-16 விமானங்களுக்குச் சேதத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூரில் இந்திய வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். இதன் காரணமாகவே வீரதீர விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications