இன்று அதிகாலையே டெல்லியில் இருந்து உலகத்திற்கே பறந்த போன்.. அமெரிக்கா டூ சவுதி.. இந்தியா விளக்கம்
டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இன்று அதிகாலையே அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட உலகின் பல்வேறு முக்கிய நாடுகளை இந்தியா தொடர்பு கொண்டு விளக்கம் அளித்தது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது இடங்களில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது ஏன் என்பது குறித்து விளக்கமளித்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன் காரணமாக கடும் கோபம் அடைந்த இந்தியா, நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியது. கற்பனையிலும் நினைத்து பார்க்க முடியாத தண்டனையை அவர்கள் பெறுவார்கள் என்று நேரடியாக எச்சரித்தது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இன்று மாலை போர் ஒத்திகை நடத்தப்பட உள்ளதாக இந்தியா கூறியிருந்தது. ஆனால் யாரும் போர் ஒத்திகை என்று போக்கு காட்டிவிட்டு, அதிரடியாக பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வான்வழி தாக்குதல் நடத்தியிருக்கிறது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்தது.
இதுகுறித்து இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், "மொத்தம், ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. எங்கள் நடவடிக்கைகள் கவனமான முறையில் செய்யப்பட்டன. எந்த பாகிஸ்தான் ராணுவ முகாம்களும் குறிவைக்கப்படவில்லை. இலக்குகளைத் தேர்ந்தெடுந்து செயல்படுத்துவதில் இந்தியா கணிசமான நிதானத்தைக் காட்டியுள்ளது" என்று கூறியுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கிறது. இதனிடையே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து இந்திய மூத்த அதிகாரிகள் பல நாடுகளில் உள்ள வெளியுறவுத்துறை அதிகாரிகளுககு விளக்கம் அளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ரஷ்யா உள்பட பல்வேறு நாடுகளுக்க பாகிஸ்தானில் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியது குறித்து இந்திய அதிகாரிகள் விளக்கம் அளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்!












Click it and Unblock the Notifications