2 தீரமிக்க பெண் அதிகாரிகளை வைத்து பாகிஸ்தானுக்குள் நடந்த அட்டாக் பற்றி பிரஸ் மீட் செய்த இந்தியா!
டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். இதில், இரண்டு பெண் அதிகாரிகள் பேட்டியளித்துள்ளனர். அவர்கள் யார் என்பதை இந்த செய்தி விளக்குகிறது.
லெப்டினன்ட் கர்னல் சோபியா குரேஷி மற்றும் வியோமிகா சிங் ஆகியோர் இந்த ஆபரேஷனில் முக்கிய பங்காற்றி இருக்கிறார்கள்.

கர்னல் சோபியா குரேஷி:
35 வயதாகும் இவர் இந்திய ராணுவத்தில் குறிப்பிடத்தக்க சாதனையை செய்த பெண்ணாக திகழ்கிறார். கடந்த 2016ம் ஆண்டு நடந்த சர்வதேச ராணுவ பயிற்சியில் இந்தியா பங்கேற்றிருந்தது. இந்த பயிற்சியில் ஜப்பான், சீனா, ரஷ்யா, அமெரிக்கா, தென் கொரியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றிருந்தன.
அதில் இந்திய படைக்கு இவர் தலைமையேற்றிருக்கிறார். இதற்கு முன்னர் பெண் அதிகாரிகள் யாரும் இதுபோன்ற சர்வதேச ராணுவ பயிற்சியில் தலைமையேற்றது கிடையாது. அந்தவகையில் இந்த சாதனையை புரிந்த முதல் பெண் அதிகாரி என்கிற பெருமைக்கு கர்னல் சோபியா குரேஷி உரியவராகியுள்ளார்.
அதற்கு முன்னர் காங்கோவில் ஐநா அமைதிப்படையில் ராணுவ பார்வையாளராக இவர் பணியாற்றியிருக்கிறார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை பாதுகாக்க பணியாற்றுவது மனதளவில் திருப்தியளிக்கிறது என்ற இவர் கூறியுள்ளார். குஜராத்தை சேர்ந்த இவர், ராணுவ பாரம்பரியமிக்க குடும்பத்திலிருந்து வந்திருக்கிறார்.
விங் கமாண்டர் வியோமிகா சிங்:
இந்திய விமானப்படையின் முக்கியமான பெண் அதிகாரியாக இவர் பணியாற்றி வருகிறார். 2004ம் ஆண்டு பைலட்டாக இவர் தனது பணியை விமானப்படையில் தொடங்கினார். தொடக்கத்தில் சீட்டாக் மற்றும் சீட்டா உள்ளிட்ட ஹெலிகாப்டர்களை ஓட்டி வந்தார். இதனையடுத்து 2017ம் ஆண்டு விங் கமாண்டராக இவர் பதவி உயர்வை பெற்றார். பெண்களின் பாதுகாப்புக்காக தொடர்ந்து பாதுகாப்பு படையில் பணியாற்றி வருவதாக இவர் கூறியிருக்கிறார்.
ஏப்.22ம் தேதி நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, இன்று அதிகாலை இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் இணைந்து ஆபரேஷன் சிந்தூரை நடத்தியிருக்கிறது.
தங்கள் கணவரை கொன்றவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என்று பெண்கள் வேதனையடைந்திருந்த நிலையில், பெண்களை கொண்டே பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்திய பெண்கள் பூ, பொட்டு, வளையல் என கலச்சாரத்தை தீவிரமாக கடைபிடிப்பதை பாகிஸ்தான் நெட்டிசன்கள் அதிகம் விமர்சித்து வந்திருக்கிறார்கள். இப்படி இருக்கையில் பெண் அதிகாரிகளை கொண்டு பதில் கொடுக்கப்பட்டிருப்பது சர்வதேச நாடுகள் மத்தியில் கவனம் பெற்றிருக்கிறது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications