காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி கூட்டணியா? மம்தாவுக்கு சிவசேனா கேள்வி

Subscribe to Oneindia Tamil

காங்கிரஸ் கட்சி இல்லாமல் எதிர்க்கட்சிகள் சேர்ந்து கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை. 2 அல்லது மூன்று எதிர்க்கட்சி கூட்டணி இருப்பதால் என்ன பயன் என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவை தேர்தல்

மக்களவை தேர்தல்

இந்தியாவில் பாஜக ஆட்சி தொடர்ந்து 2 ஆம் முறையாக ஆட்சியை தொடரும் நிலையில் 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் வர உள்ளது. பாஜக அரசின் மீது பல குற்றச் சாட்டுகளை சுமத்திவரும் எதிர்க்கட்சிகள் 2024 தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு எதிராக அணி அமைப்பதில் முனைப்பு காட்டி வருகிறது.

மம்தா பானர்ஜி எடுக்கும் முயற்சி

மம்தா பானர்ஜி எடுக்கும் முயற்சி

அடுத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளை இணைப்பதிலும், பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதிலும் தனி கவனம் செலுத்துகிறார். இதற்காக அவர் மாநிலம் தாண்டி பயணம் செய்து எதிர்க்கட்சித்தலைவர்களை சந்திக்கிறார். சமீபத்தில் மும்பைக்கு பயணம் செய்த மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு மாற்றாக தனி அணி உருவாக்கும் முயற்சியாக தேசியவாதக் காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவேசனா கட்சி்த் தலைவர்கள் உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் ஆகியோரைச் சந்தித்தார்.

காங்கிரஸ் மீது விமர்சனம்

காங்கிரஸ் மீது விமர்சனம்

அவரது சந்திப்பின் போது காங்கிரஸ் தலைமையிலான அணி எங்கே உள்ளது என விமர்சித்தார். மம்தாவின் சந்திப்புக்குப்பின் சிவசேனாவின் நிலைப்பாடு குறித்து சஞ்சய் ராவத் பேட்டி அளித்துள்ளார், அது மம்தாவின் முயற்சியை சிவசேனா ஏற்காது என்பதைக் காட்டுவதாக உள்ளது.

சஞ்சய் ராவத்தை சந்தித்த மம்தா

சஞ்சய் ராவத்தை சந்தித்த மம்தா

மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த வாரம் 3 நாட்கள் பயணமாக மகாராஷ்டிரா சென்றரா். அங்கு சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே, சஞ்சய் ராவத், என்சிபி கட்சித் தலைவர் சரத் பவார் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். அப்போது பாஜகவுக்கு எதிராக வலுவான மாற்றுக் கூட்டணியை அமைக்க காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது என்று மம்தா குற்றம்சாட்டினார்.

 ராகுலுடன் சந்தித்த ராவத்

ராகுலுடன் சந்தித்த ராவத்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்பதே தற்போது இல்லை" என்று கூறி ராகுல் காந்தியையும் கடுமையாக விமர்சித்தார். மம்தாவின் சந்திப்புக்குப்பின் ராகுல் காந்தியை சிவசேனா கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ராவத் நேற்று சந்தித்துப் பேசினரார். இந்த சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:

ராகுல் காந்தியுடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி குறித்து ஆலோசித்தேன். அதுகுறித்து வெளிப்படையாக சொல்ல முடியாது. அவருடன் பேசியது குறித்து எங்கள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயுடன் ஆலோசித்த பின் செய்தியாளர்களிடம் தெரிவிப்பேன்.

ராகுல் தலைமை ஏற்க சிவசேனா அழைப்பு

ராகுல் தலைமை ஏற்க சிவசேனா அழைப்பு

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் முயற்சி நடந்து வருகிறது. இதற்கான பணியை ராகுல் காந்தி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று ராகுல் காந்தியிடம் நான் கேட்டுக்கொண்டேன். காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சிகள் சேர்ந்து அமைக்கும் கூட்டணிக்கு வாய்ப்பில்லை. 2 அல்லது 3 ஆக பிரிந்து எதிர்க்கட்சிக் கூட்டணிகள் அமைத்து எதை சாதிக்கப் போகிறோம்.

மம்தா கருத்தை ஏற்காத சிவசேனா

மம்தா கருத்தை ஏற்காத சிவசேனா

எதிர்கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து இதுவரை நான் எந்த கட்சித் தலைவரிடமும் பேசவில்லை. நான் சொல்வதெல்லாம் ஒரே ஒரு கூட்டணியாக எதிர்க்கட்சிகள் திரள வேண்டும். 2 அல்லது 3 எதிர்க்கட்சிகள் சேர்ந்து அமைக்கும் கூட்டணி பாஜவுக்கு மாற்றாக அமையாது எதிர்க்கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்தால்தான் பாஜவுக்கு மாற்றை உருவாக்க முடியும். என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மம்தாவுக்கு பின்னடைவு

மம்தாவுக்கு பின்னடைவு

இதன்மூலம் காங்கிரஸ் அல்லாத கூட்டணி குறித்த மம்தாவின் முயற்சிக்கு சிவசேனா ஒப்புக்கொள்ளாது என்பது தெரியவந்துள்ளது. மேலும் காங்கிரஸ் இல்லாமல் மம்தா அமைக்கும் கூட்டணி பாஜகவுக்கே உதவும் என்கிற விமர்சனமும் வைக்கப்படும் நிலையில் அதே கேள்வியை சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில், சஞ்சய் ராவத் எழுதியிருந்த கட்டுரையில், " காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்து தனியாக எதிர்க்கட்சிகளைக் கொண்ட அணியை அமைக்க மம்தா பானர்ஜி முயல்கிறார்" என விமர்சித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+