அக்னிபாத்தை கையில் எடுக்கும் எதிர்க்கட்சிகள்.. நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்ப திட்டம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர், தற்போது, அக்னிபத் தொடர்பான விவாதத்தை கையில் எடுக்க முடிவு செய்துள்ளனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்றம் தொடங்கிய நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்தனர். இந்த பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்கக்கோரி அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளிலும் பணிகள் எதுவும் நடைபெறாமல் முடங்கின. நாள்தோறும் அவைகள் ஒத்திவைக்கும் நிகழ்வுகளே நீடித்தது.

Opposition parties decide to raise the Agnipath issue in Parliament

ராஜ்ய சபாவில் அவை தலைவரின் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட 27 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்து அவைத்தலைவர் நடவடிக்கை மேற்கொண்டார். இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள், தங்கள் இடைநீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் வெளியில் உள்ள காந்திசிலை முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதனிடையே, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு குறித்து காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து, பாஜக அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களும் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் கூச்சல் குழப்பம் நீடித்தது. இதனையடுத்து, இன்று வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இதனையடுத்து, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதம் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் மக்களவையில் இன்றும், மாநிலங்களவையில் நாளையும் இந்த பிரச்சினை விவாதத்துக்கு எடுக்கப்படும் என கூறப்படுகிது. விலைவாசி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டபின், அக்னிபத் திட்டத்தை எழுப்ப எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு உள்ளனர். குறிப்பாக அடுத்த வாரத்தில் இந்த விவகாரத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளன. எனினும் நாடாளுமன்ற தொடரில் இன்னும் வெறும் 10 நாட்களே உள்ளதால், இந்த பிரச்சினை மீது விவாதம் நடத்த முடியுமா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

அக்னிபத் பிரச்சினையை விவாதத்துக்கு கொண்டு வருவதில் எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலுடன் இருந்தாலும், இந்த பிரச்சினை தொடர்பாக அவர்கள் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுவதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் மற்றும் வடபிராந்திய கட்சிகள் அனைத்தும் அக்னிபத் திட்டத்தை முற்றிலும் திரும்பப்பெற வலியுறுத்தி வரும் நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் அக்னிவீரர்களுக்கு பணி வழங்கும் பொறுப்பில் இருந்து மாநில அரசுகளை விடுவிக்க வேண்டும் என்று மட்டுமே வலியுறுத்தி வருகின்றன. இதனால் அக்னிபத் விவாதத்தில் எதிர்க்கட்சிகள் எவ்வாறு ஒருங்கிணைந்து பங்குபெறும் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+