பாஜகவை வீழ்த்த ப.சிதம்பரம் சொன்ன "மாஸ்டர் பிளான்!" பாட்னா சங்கமத்தில் ஆரம்பிக்கிறதா திருப்புமுனை?
டெல்லி: லோக்சபா தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் 475 தொகுதிகளில் பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் இணைந்து பொது வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்ற மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் பார்முலா ஏற்கப்படுமா என்பது பீகார் மாநிலம் பாட்னாவில் ஜூன் 12-ல் நடைபெற உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளின் மகா சங்கமம் மாநாட்டில் தெரியவரும்.
2014, 2019 லோக்சபா தேர்தல்களில் பாஜக அதிரடியாக தொடர்ந்து வெற்றி வாகை சூடியது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கூட பெற முடியாத நிலைக்கு ஒரு மாநில கட்சி பெறக் கூடிய இடங்கள் அளவுக்குதான் வெற்றி பெற முடிந்தது. இதனால் காங்கிரஸை கழற்றிவிட்டு பாஜக, காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பது பல மாநில தலைவர்களின் கருத்தாக இருந்தது.

மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸை எதிர்த்துதான் முதல்வர் மமதா பானர்ஜி அரசியல் செய்கிறார். அதனால் காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகளின் கூட்டணியை அவர் தொடர்ந்து வலியுறுத்தினார். இதற்கான சந்திப்புகளையும் இடைவிடாமல் மேற்கொண்டார். அதேபோல சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவும் காங்கிரஸுடனான கூட்டணி அனுபவத்தால், ஆளைவிட்டால் போதும் என்கிற நிலைமையாக இதர மாநில கட்சிகளுடன் கரம் கோர்க்க தயார் என்றார். ஶ்ரீநகரில் நடைபெற்ற ராகுல் காந்தியின் பாரத் ஜோடா பாதயாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் கூட அகிலேஷ் யாதவ் பங்கேற்கவில்லை. தெலுங்கானாவிலும் காங்கிரஸுக்கு எதிராக கேசிஆர் அரசியல் செய்ய வேண்டி இருப்பதால் அவரும் காங்கிரஸ் அல்லாத கூட்டணி ஒன்றை உருவாக்க முயற்சித்தார். இப்படி எதிர்க்கட்சிகள் பிளவுபட்டு நிற்பதை பாஜகவும் மவுனமாக வேடிக்கை பார்த்தது.
ஆனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ்- ஆர்ஜேடியுடன் கரம் கோர்த்து பீகாரி ஆட்சி அமைத்திருக்கும் நித்ஷ்குமார், காங்கிரஸை விட்டுவிடாமல் அதனையும் உள்ளடக்கிய மெகா கூட்டணிக்கான காய்நகர்த்தல்களை மேற்கொண்டார். தொடக்கத்தில் காங்கிரஸும் கூட நிதிஷ்குமாரின் இந்த முயற்சி தேறாது என ஒதுங்கித்தான் இருந்தது. பின்னர் ஒரு கட்டத்தில் நிதிஷின் முயற்சிகளுக்கு காங்கிரஸ் ஓகே சொன்னது. இதனால் நிதிஷ்குமாரின் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேகம் அதிகரித்தது. காங்கிரஸ் மற்றும் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களை நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ் இருவரும் மாநிலம் மாநிலமாக சென்று சந்தித்து பேசி வருகின்றனர். இதன் அடுத்த கட்டமாகத்தான் பாட்னாவில் ஜூன் 12-ல் காங்கிரஸ் மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களின் மாநாடு நடைபெற உள்ளது.

பாட்னா மாநாட்டை நிதிஷ்குமார் ஒருங்கிணைப்பதால் அரவிந்த் கெஜ்ரிவால், மமதா பானர்ஜி உள்ளிட்டோர் ஓகே சொல்லிவிட்டனர். இதர எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்பது ஏறத்தாழ உறுதியாகி உள்ளது. இம்மாநாட்டில் லோக்சபா தேர்தலை எந்த வகையில் ஒருங்கிணைந்து எதிர்கொள்வது என்பதுதான் வியூகமாக இருக்கப் போகிறது என கூறப்படுகிறது.
அண்மையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், பாஜக போட்டியிடக் கூடிய 450 தொகுதிகளில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து பொதுவேட்பாளரை நிறுத்தலாம். இது குறித்து பாட்னா மாநாட்டில் பேசி முடிவெடுக்கலாம் என கூறியிருந்தார். தற்போது நிதிஷ்குமாரும் இது தொடர்பாக ஆலோசனைகளை நடத்தி வருகிறாராம். நாடு முழுவதும் மொத்தம் 475 தொகுதிகளில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து பொது வேட்பாளர்களை களமிறக்கினால் வெல்வது எளிது என்பதுதான் புதிய வியூகமாம். இந்த வியூகம் விஸ்வரூபம் எடுக்குமா? இல்லையா? என்பது பாட்னா சங்கமத்தில் தெரியவரும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications