நாடாளுமன்ற கூட்டம்: எம்பி திருச்சி சிவா உட்பட பல எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒத்திவைப்பு தீர்மானம்!
புதுடெல்லி: விலைவாசி உயர்வு மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என எம்.பி திருச்சி சிவா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த பலர் மாநிலங்களவையில் நோட்டீஸ் கொடுத்தனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 2-ம் நாள் அமர்வு தொடங்கி இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.
அடுத்த மாதம் 12-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடர் காலையில் தொடங்கியதும் எதிர்க்கட்சியினர் கேஸ் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி கோஷத்தில் ஈடுபட்டனர்.

ஒத்திவைப்பு தீர்மானம்
தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் எம்.பி மாணிக்கம் தாகூர் லோக் சபாவில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் நோட்டீஸ் கொடுத்தார். அத்தியாவசிய பொருட்கள் மீது 5 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதித்தது குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் கோரிக்கை விடுத்தார்.

விலைவாசி உயர்வு
அதேபோல், ராஜ்ய சபாவில், சஸ்பென்சன் நோட்டீஸ் கொடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி இளமாறன் கரீம், மாநிலங்களவையின் 267-வது விதிகளின் கீழ் அலுவல் நடவடிக்கைகளை ஒத்திவைத்து விட்டு விலைவாசி உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மீது 5 சதவீத ஜி.எஸ்.டி விதித்தது குறித்து விவாதிக்க வெண்டும் என வலியுறுத்தினார்.

திருச்சி சிவா
திமுகவை சேர்ந்த திருச்சி சிவா எம்.பியும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வலியுறுத்தி ராஜ்யசபாவில் நோட்டீஸ் கொடுத்தார். பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து உள்ளது. எனவே இது குறித்து விவாதிக்க வலியுறுத்தி திருச்சி சிவா எம்.பி நோட்டீஸ் கொடுத்தார்.

குறைந்த பட்ச ஆதார விலை
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சதா எம்.பியும் ராஜ்யசபாவில், குறைந்த பட்ச ஆதார விலை குறித்த குழு தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் கொடுத்தார். வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்து விட்டு குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக அரசு அமைத்த குழு குறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் அக்னிபாத் திட்டம் குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி தீபிந்தர் சிங் ஹூடா நோட்டீஸ் கொடுத்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications