விலைவாசி உயர்வு, பணவீக்கம்.. நாடாளுமன்றத்தை 3-வது நாளாக இன்றும் முடக்கிய எதிர்க்கட்சிகள்!
டெல்லி: விலைவாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளை விவாதிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர் முழக்கம் ஏற்பட்டதால் இரு சபைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. அப்போது நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு நடைபெற்றது.

பின்னர் சபை நடவடிக்கைகளின் முதல் நாளிலும் ஜிஎஸ்டி வரி உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவைகளை முன்வைத்து நாடாளுமன்ற வளாகத்தில் பதாகைகளுடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்குள்ளும் இரு சபைகளிலும் இதே பிரச்சனையை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பினர். இதனால் நாடாளுமன்ற இரு சபைகளின் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நேற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் 2-வது நாள் நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. விலைவாசி உயர்வு உள்ளிட்டவைகளை விவாதிக்க கோரி இருசபைகளிலும் முற்பகல் 11 மணிக்கு சபைகள் தொடங்கிய உடன் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை நடவடிக்கைகள் முதலில் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன. பிற்பகலில் சபைகள் கூடியதும் அமளியும் தொடர்ந்தது. இதனால் இரு சபைகளின் நடவடிக்கைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில் இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் 3-வது நாள் நடவடிக்கைகள் முற்பகல் 11 மணிக்கு தொடங்கியது. அப்போதும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் சபையை நடைபெற விடாமல் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு சபைகளின் நடவடிக்கைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications