நீங்கள் "அவரோட" ரசிகரா.. அப்ப இந்த படத்தில் மறைந்திருக்கும் பிரபலம் யாருனு சொல்லுங்க!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மூளையை குழப்பும் விதத்தில் அமைந்துள்ள இந்த படத்தில் ஒளிந்திருக்கும் பிரபலத்தை நீங்கள் உண்மையான ஜீனியஸாக இருந்தால் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

சும்மா இருக்கும் நேரத்தில் மூளைக்கு வேலை கொடுக்கும் பல்வேறு விஷயங்களை செய்யலாம். கணிதம் போடுவது, பசில்ஸ் தீர்ப்பது, கட்டங்களை நிரப்புவது, தமிழ் சொற்களை வரிசைப்படுத்துவது, ஆங்கில எழுத்துகளை சீரமைப்பது உள்ளிட்டவைகளை விளையாடி வருகிறார்கள்.

அது போல் சினிமா பிரபலங்களின் கண்கள், உதடு, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளை மட்டும் காட்டி இது யாருடையது என கேட்பார்கள். இப்படியிருக்க தற்போது ஒளியியல் மாயை என்ற ஒரு விஷயம் பிரபலமாகியுள்ளது.

நம்பர்

நம்பர்

அதாவது ஒரு நிறத்தில் ஒளிந்திருக்கும் எழுத்துகளையோ நம்பரையோ கண்டுபிடிப்பது. ஒரு படத்தில் இருக்கும் சில குறிப்பிட்ட பொருட்களை கண்டுபிடிப்பது, படங்களுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிப்பது என நிறைய இருக்கிறது. இவையும் நம் கண்கள் நன்றாக இருக்கிறதா என்பதை சோதிப்பதோடு மூளைக்கும் வேலை கொடுக்கிறது.

 சதா சர்வகாலம்

சதா சர்வகாலம்

சதா சர்வகாலமும் போனை பார்த்துக் கொண்டிருப்பதற்கு பதிலாக இது போன்ற விளையாட்டுகளில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளலாம். சரி விஷயத்திற்கு வருவோம். இந்த செய்தியில் உள்ள புகைப்படத்தை பார்த்தால் சற்று மூளை குழம்புவது போல் இருக்கும். பார்த்தவுடன் நான் கண்டுபிடித்துவிட்டேன். நான் உண்மையில் ஜீனியஸ்தாம்பா (!).

அமெரிக்காகாரர்

அமெரிக்காகாரர்

நீங்களும் பார்த்தவுடன் சொல்றீங்களானு பார்ப்போம். அதாவது அந்த படத்தில் இருப்பது ஒரு பிரபலத்தின் முகம். மிகவும் பரிட்சயமானவர். அவர் தற்போது உயிருடன் இல்லை. என்ன கண்டுபிடித்து வீட்டீர்களா, இன்னொரு க்ளூ அவர் பாப் பாடகர், இவர் 2009 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார்.

முக்கிய க்ளூ

முக்கிய க்ளூ

இன்னொரு முக்கிய க்ளூ, இவர் தான் காதலித்த பெண்ணின் முகத்தை போன்று தனக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டவர். மின்னல் வேக நடனங்களுக்கு சொந்தக்காரர், இப்போது புரிந்திருக்குமே, இவர் யார் என! ஆம் மைக்கேல் ஜாக்சன்தான் அந்த படத்தில் ஒளிந்திருப்பது. க்ளூ கொடுத்து கண்டுபிடித்ததற்கு வாழ்த்துகள் மக்களே! சரி இந்த மாதிரி படங்களை எப்படி கண்டுபிடிக்கணும் தெரியுமா. அந்த படத்தை ஜூம் அவுட் செய்து பாருங்க, அப்படியே யாரு படம்னு தெரியும். இல்லாட்டி போனை ஷேக் செய்து பார்த்தாலும் தெரியும் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+