ஆப்டிகல் இல்யூஷன் படம்: அறைக்குள் ஒளிந்து இருக்கும் 2 பெண்கள்.. கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ் தான்
டெல்லி: கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பூப்பறித்துக்கொண்டிருக்கும் பெண்ணின் அருகே இரண்டு பெண்களின் முகம் மறைந்திருக்கிறது. இந்த இரண்டு பெண்களின் முகத்தினையும் 11 செகண்டில் கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ் தான்.
கண்களை குழப்பி மூளைக்கு வேலை கொடுக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு எப்போதும் இணையத்தில் தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.
ஆப்டிகல் மாயை அல்லது ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் இத்தகைய படங்கள் கண்களை குழப்பி மூளைக்கு வேலை கொடுக்கும் என்றும் சொல்லலாம்.

இல்யூசன் படங்கள்
ஒரு சில நேரம் கண்டுபிடிக்க முடியாதபடி தலையை பிய்த்துக்கொள்ளும் அளவுக்கு இத்தகைய படங்கள் மனிதனின் மூளையை சோதித்து பார்க்கும். இதனால் இத்தகைய படங்கள் தனது அறிவாற்றல் மற்றும் அறிவுத்திறனை சோதித்து பார்க்க உதவுகின்றன என்றும் சொல்லலாம். இதனால் சமூக வலைத்தளத்தில் வலம் வரும் இது போன்ற ஆப்டிகல் இல்யூசன் படங்களை இணையத்தில் அதிகம்பேர் விரும்பி பார்க்கின்றனர்.

ஆப்டிகல் மாயை
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் பல்வேறு வகைகள் உள்ளன. புதிர்கள் ஒரு வகை என்றால், மேலோட்டமாக பார்த்தால் ஒன்று உற்று நோக்கி பார்த்தால் வேறு ஒன்றும் என நமது கண்களை குழப்பும் வகையிலான படங்களும் ஏராளமாக உள்ளன. இது நமது அறிவுக்கூர்மை மற்றும் கவனிப்புத்திறனை ஓரளவுக்கு கணித்துவிடும் என்று சொல்லப்படுவம் உண்டு.. சில சமயம் நமக்கு சவால் விடுக்கும் வகையில் இப்படங்கள் இருப்பதால் பலரும் இதை விரும்பி பார்த்து அதற்கு விடையை காணும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு விடுகின்றனர்.

நட்பு வட்டங்களுக்கு..
அதன்படி இன்று சமூக வலைத்தளத்தில் ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒன்று டிரெண்ட் ஆகி வருகிறது. அந்த படத்தில், பெண் ஒருவர் பூந்தொட்டியில் இருந்து பூ ஒன்றை பறிக்கிறார். ஆனால் அந்த படத்தில் அவரது உறவினர்கள் இருவரிம் முகம் போன்ற தோற்றமும் அந்த படத்தில் மறைந்து இருக்கிறது என்றும்.. இந்த இரு பெண்களின் முக உருவத்தை ஒரு சதவீதத்தினரால் மட்டுமே 11 செகண்ட் டைமுக்குள் கண்டுபிடிக்க முடியும் என்றும் அந்த படத்தை வெளியிட்டவர்கள் கூறி இருக்கின்றனர்.

11 செகண்ட் டைம்
இந்த படம் நமக்கு சற்று சவால் விடுக்கும் என்றே கூறலாம். படத்தை உற்று கவனித்தால் ஒரு பெண் மட்டுமே இருப்பது போல தெரிகிறது. சரி 11 செகண்ட் டைம் எடுத்துக்கொள்ளுங்கள்.. படத்தை உற்று கவனியுங்கள்.. இரண்டு பெண்களின் முகம் அந்த படத்தில் தெரிகிறதா.. கண்டுபிடித்திருந்தால் நீங்க ஒரு ஜீனியஸ் என்றே சொல்லலாம். இதேபோல் படத்தில் எங்க பாஸ் பெண்களின் முகம் இருக்கிறது என்ற கேட்பவர்கள் மேலும் சில நொடிகள் டைம் எடுத்துக்கொண்டு படத்தை உற்று கவனியுங்கள்.

உற்று கவனியுங்கள்
இப்போதும் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால்... பார்க்கும் கோணங்களை மாற்றி பார்த்தால் இந்த படத்தில் மறைந்திருக்கும் இரண்டு பெண்களின் முகம் நமக்கு தெரியும்... குறிப்பாக இந்த படத்தை அப்படியே தலைகீழாக வைத்து பார்த்தால் எளிதில் கண்டுபிடித்து விடலாம்.. இப்போது கண்டுபிடித்துவிட்டீர்களா... இப்போதும் தெரியவில்லை என்றால் நடுவில் உள்ள ஒரு பெரிய பூந்தொட்டிக்கு இருபுறமும் நன்கு கவனியுங்கள்.. இப்போது அதில் தெரிகிறதா இரண்டு பெண்கள் முகம்.. அப்படியும் தெரியவில்லை என்றால் மேலே உள்ள படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications