ஆப்டிகல் இல்யூஷன் படம்: "மறைந்திருக்கும் கருப்பு பூனை" ரொம்ப கஷ்டம்! கண்டுபிடிச்சா நீங்க வேற லெவல்!
டெல்லி: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கருப்பு பூனை ஒன்று மறைந்திருக்கிறது. இந்த பூனையை 17 செகண்டுக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் மிக்க கவனிப்புதிறன் கொண்டவர் தான்.
நமது கண்களையே நம்மை ஏமாற்ற வைக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு இணையத்தில் எப்போதும் தனித்த வரவேற்பு உள்ளது.
வெறுமனே பொழுதை மட்டும் போக்காமல் நமது மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் அமைந்து இருப்பதால் இத்தகைய இல்யூஷன் படங்களை பலரும் விருப்பப்பட்டு பார்ப்பதோடு, தங்களது நட்பு வட்டாரத்திற்கும் பகிர்ந்து சவால் விடுக்கின்றனர்.

மேலோட்டமாக பார்த்தால்
பொதுவாக இல்யூஷன் படங்கள் மேலோட்டமாக பார்த்தால் ஒரு மாதிரியாகவும் அதை சற்று உற்று கவனித்தால் வேறு மாதிரியாக இருக்கும். இதற்கு கானல் நீரைக் கூட ஒரு உதாரணமாக சொல்ல முடியும். தொலைவில் இருந்து பார்த்தால் நீர் ஓடுவது தெரியும். ஆனால், அருகில் சென்றால் அப்படி எதுவும் இருக்காது. இதுபோலத்தான் இல்யூஷன் படங்களும் மேலோட்டமாக பார்த்தால் நம்மை ஏமாற்றக்கூடியது.

கவனிப்பு திறன்
எனவே உற்றுபார்த்து நமது கவனிப்புத்திறனை பரிசோதிக்கும் வகையில் இல்யூஷன் படங்கள் இருக்கிறது என்றால் அது மிகையல்ல. அந்த வகையில், இணையத்தில் அதிகம் பரவி வரும் ஒரும் இல்யூஷன் படத்தை தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். ஆலோவீன் கொண்டாட்டம் மேற்கத்திய நாடுகளில் நேற்று களை கட்டியிருந்தன. எனவே, அது தொடர்பான ஒரு இல்யூஷன் படமே தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

பூனையை கண்டுபிடிக்க வேண்டும்
இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் இல்யூஷன் படத்தில் இருண்ட வான்வெளி போன்ற தீம் படத்தில் மெழுகுவர்த்திகள், கிங்கர்பிரெட்கள், பயமுறுத்தும் வடிவிலான பொம்மைகள் உள்ளிட்டவை உள்ளன. இவைகளுக்கு மத்தியில் ஒரு பூனையும் ஒளிந்துள்ளது. இந்த பூனை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பதே உங்களுக்கான இன்றைய சவாலாகும். 17 செகண்டுகளுக்குள் நீங்கள் இந்த பூனையை கண்டுபிடித்தால் உண்மையிலேயே நீங்கள் கவனிப்புத்திறன் அபாரமானது என்று சொல்லிக்கொள்ளலாம். சொன்னபடி 17 செக்கண்டுகள் எடுத்துக்கொண்டு சவாலை நிறைவேற்றுங்கள் பார்க்கலாம்.

எங்கே இருக்கிறது?
அவ்வளவு சீக்கிரத்தில் இந்த பூனையை உங்களால் கண்டுபிடித்திட முடியாது. அப்படி குறிப்பிட்ட 17 செகண்டில் நீங்கள் கண்டுபிடித்தீர்கள் என்றால் உங்கள் கவனிப்பு திறன் அபாரமானது என்று மெச்சிக்கொள்ளலாம். ஆனால் இந்த படத்தில் மறைந்திருக்கும் பூனையை ஆயிரத்தில் ஒருவராலேயே கண்டுபிடிக்க முடியும். மிகவும் சவால் மிகுந்த இந்த படத்தில் மறைந்திருக்கும் கருப்பு பூனையை கண்டுபிடித்து வீட்டீர்களா...

ஒரு டிப்ஸ்..
அப்படி கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள். கண்டுபிடிக்காதவங்களுக்கு நாங்கள் சில ஐடியாக்கள் கொடுக்கிறோம். அதை வச்சி டிரை பண்ணி பாருங்க.. ஈசியா கண்டுபிடிச்சிடலாம். படத்தின் மேல்புறம், இடதுபக்கம் பார்த்து உங்கள் நேரத்தை வீணடித்து கொண்டு இருக்காதீங்க... அதேபோல் பூனை கருப்பு நிறத்தில் உள்ளது என்பதையும் மனதில் வைத்து தேடுங்கள்.. இப்போது கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நினைக்கிறோம்.

இங்கே தான் இருக்கிறது
இப்போதும் கண்டுபிடிக்காதவங்களுக்கு கூடுதலாக ஒரு டிப்ஸ்.. பூனை அங்கே இருக்கும் பலூன்களுக்கு (BOO என்ற வடிவில்) இடையே மறைந்து இருக்கிறது பாருங்கள்... விடையை எங்கு இருக்கிறது என இங்கே வட்டமிட்டு காட்டியிருக்கிறோம். அதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications