ஆப்டிகல் இல்யூஷன் படம்.. இங்கே ஒரு யானை மறைந்திருக்கு.. கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலிதான் பாஸ்!
டெல்லி: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு யானை மறைந்திருக்கிறது. இதை நீங்கள் கண்டுபிடித்தால் புத்திசாலி தாங்க..
ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு இணையத்தில் எப்போதும் தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.
புதிரான இந்த படங்கள் பார்ப்பவர்களை குழப்புவதோடு, நமது கவனிக்கும் திறனை சோதித்து பார்க்கும் விதத்தில் இருக்கும்.

ஆப்டிகல் இல்யூஷன் படம்
இதனால், இத்தகைய படங்கள் இணையத்தில் டிரெண்ட் ஹிட் அடித்து வருகின்றன. அதன்படி தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்ட ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படத்தைத்தான் இங்கே நாம் பார்க்க இருக்கிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படம், நீங்கள் எந்த அளவு புத்திசாலி என்பதை தெரியப்படுத்தும் என்று மைண்ட்ஸ் ஜர்னல் என்ற நாளிதழ் கூறியிருக்கிறது. முதலில் டிக் டாக்கில் அதிகம் பகிரப்பட்ட இந்த இல்யூஷன் படம் தற்போது ஒட்டுமொத்த இணைய உலகத்திலும் பரவிக் கிடக்கிறது.

1 சதவீத பேர் தான் கண்டுபிடித்துள்ளனர்
இந்த படத்தை உற்று பாருங்கள்... இதில் மறைந்து இருக்கும் யானையை கண்டுபிடிப்பதே உங்களுக்கு விடப்பட்டுள்ள சவால்... இதை நீங்கள் கண்டுபிடித்தால் புத்திசாலி தான். அதுவும் ஒரு நிமிடத்திற்குள் கண்டுபிடித்தால் நீங்கள் அதி புத்திசாலிதான்... ஆனால், இந்த படத்தில் யானை எங்கு மறைந்திருக்கிறது என்பதை வெறும் 1 சதவீதத்தினர் மட்டுமே கண்டுபிடித்து இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, நீங்கள் இந்த 1 சதவீத்திற்குள் வருகிறீர்களா? வாருங்கள் பார்க்கலாம்..

ஏதாவது தென்படுகிறதா?
கருப்பு மற்றும் பச்சை நிறத்திலான ஒரு விளக்கப்படம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் மரங்களும் செடிகளும் ஆங்காங்கே புதர்களும் காணப்படுகிறது. பார்ப்பதற்கு வனப்பகுதி போல இருக்கும் இந்த இடத்தில் வேடன் ஒருவர் துப்பாக்கியுடன் வேட்டையாட வருகிறார். வேட்டைக்கு தீனி போட ஏதாவது தென்படுகிறதா? என்று வேடன் வனப்பகுதியை உன்னிப்பாக கவனித்து கொண்டு இருக்கிறார். இதைத் தாண்டி தொலை தூரத்தில் சில வேடர்கள் இருப்பதும் தெளிவாக தெரிகிறது.

இங்கே யானையே இல்லப்பா
வேறு ஏதாவது உங்கள் கண்ணுக்கு புலப்படுகிறதா? படத்தை இன்னும் கவனமாக உற்று பாருங்கள்... அட இன்னமும் உங்களால் இங்கு மறைந்து இருக்கும் யானையை கண்டுபிடிக்க முடியவில்லையா.. சரி ஃபீல் பண்ணாதீங்க.... நாங்கள் உங்களுக்கு சில டிப்ஸ் தர்றோம்..அதை கவனமாக படியுங்க.. எளிதாக யானையை கண்டுபிடிச்சிடலாம்.. இந்த படத்தில் எப்படியும் யானையும் கண்டுபிடித்தே தீர வேண்டும்.. என்று உன்னிப்பாக படத்தை பார்த்து தலையை பிய்த்துக்கொண்ட பலரும்.. இங்கே யானையே இல்லப்பா.. என குழப்ப நிலைக்கு வந்திருக்கலாம்..

ஈசியா கண்டுபிடிக்க ஒரு டிரிக்
ஆனால், யானையை ஈசியா கண்டுபிடிக்க ஒரு டிரிக் இருக்கு.. அது என்னன்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமா இருக்கீங்களா... அதையும் சொல்றோம் தெரிஞ்சுக்கோங்க... படத்தை அப்படியே தலைகீழாய் பாருங்கள்.. இப்போ இல்யூஷன் படத்தை உற்று பார்த்தீங்கன்னா.. மரங்களாக நீங்கள் நினைத்தது யானையின் கால்களாக தெரியும். படத்தின் இடதுபக்கம் யானையின் தும்பிக்கை போல தெரிகிறதா? அப்டீன்னா நீங்க யானையை கண்டுபிடிச்சிட்டீங்க... நீங்க இப்போ உங்களுக்கே ஒரு சபாஷ் போட்டுக்கலாம்..
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications