இந்த படத்தில் உங்களுக்கு முதல்ல என்ன தெரியுது.. நீங்கள் எப்படிபட்டவர் என்று தெரிஞ்சிக்க சூப்பர் ஐடியா
டெல்லி: இன்று கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் படம் அந்த வகையை சேர்ந்தது தான். இந்த படத்தில் முதலில் உங்க கண்களுக்கு என்ன தெரியுது என்று சொல்லுங்கள் அதை வைத்து நாங்கள் உங்கள் கேரக்டரை ஓரளவு கண்டுபிடித்து விடலாம்.
நாம் எப்படிப்பட்டவர்கள், நமது கேரக்டர் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டதவர்களே இல்லை என்று சொல்லிவிடலாம்.
அப்படிப்பட்டவர்களுக்கு தீனி போடும் வகையில்தான் இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் அமைந்துள்ளது.

எது உங்கள் கண்ணுக்கு முதலில்..
இல்யூஷன் படங்கள் மூலம் ஒருவரது கேரக்டரை அப்படியே சொல்லிவிட முடியாதுதான். ஆனாலும் ஓரளவு கணித்துவிடலாம் என்று சில ஆய்வுகளும் கூறுவதாக சொல்லபப்டுகிறது. அந்த வகையில் நாம் இன்று பார்க்கும் இந்த இல்யூஷன் படம் ஓரளவு நாம் எப்படிப்பட்டவர்கள் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என்பதை யூகிக்கும் வகையிலானது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தை உற்று பாருங்கள்.. படத்தில் எது உங்கள் கண்ணுக்கு முதலில் தெரிகிறது.

இயற்கை காட்சி கிடையாது
இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருபுறமும் பசுமையான காட்சிகளும் நடுவில் ஆறு ஓன்றும் பாய்வது போல தெரிகிறது. ஆறு ஓடும் பாதை ஒரு பெண்ணின் உருவத்தை போல பிரதிபலிக்கிறது. அதேபோல், பலருக்கும் பாலம், படகு, பசுமையான நிலப்பரப்பு என பலவும் முதலில் தெரியலாம். இது உண்மையான இயற்கை காட்சி கிடையாது. ஒரு அழகான வரைபடம்தான். இந்த படத்தில் உங்கள் கண்ணுக்கு முதலில் தெரிவதை வைத்து உங்களின் மோசமான ஆளுமைத்திறன்களை சொல்லிவிடலாம் என்று நிபுணர்கள் சொல்கிறார்.

பெண்ணின் உருவம் தெரிந்தால்..
சரி விஷயத்துக்கு வருவோம்.. இந்த படத்தில் முதலில் பெண்ணின் உருவம் தெரிந்தால்... உங்களின் மோசமான பழக்க வழக்கம் என்பது ஒருவரின் வெளித்தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என்பதே ஆகும். அதற்காக நீங்கள் கரடு முராடாக பழகும் தன்மை கொண்டவர் என்று சொல்லிவிட முடியது. ஒரு நபரை அவர்களின் தோற்றத்தை வைத்து மதிப்பிடும் பழக்கம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் உங்களின் சொந்த தோற்றம் குறித்தும் நீங்கள் அதிகம் கவலைப்படும் ஒரு நபராக இருக்கக் கூடும்.

முக்கியத்தும் கொடுக்கும் நபராக
அதேபோல், இந்த படத்தில் உங்கள் கண்ணுக்கு முதலில் ஆறு தெரிந்தால்.. உங்கள் குணாதிசயம் இப்படித்தான் இருக்குமாம். நீங்கள் பெரும்பாலும் உங்களின் சமூக அந்தஸ்து பற்றி கவலைப்படும் நபராகவே இருப்பீர்கள். உங்கள் கண்னுக்கு முதலில் படகு தெரிந்து இருந்தால்.. பிற எல்லாவற்றையும் விட உங்கள் நலனுக்கே அதிக முக்கியத்தும் கொடுக்கும் நபராக இருக்கக் கூடும். இதில் சில நன்மைகளும் இருக்கின்றன.

100 சதவீதம் ஒருவரின் கேரக்டர்
எந்த பணியை தன்னால் செய்து விட முடியும் என்ற அதீத தன்னம்பிக்கையும் உங்களுக்கு இருக்கும். இந்த பழக்கம் உங்களுக்கு இருப்பதால் நீங்கள் ஒருபோதும் பிறரிடம் ஆலோசனையோ அறிவுரையோ கேட்க விரும்பமாட்டீர்கள்... இல்யூஷன் படங்களை வைத்து 100 சதவீதம் ஒருவரின் கேரக்டர் பற்றி சொல்லிவிட முடியாது. ஓரளவு கணிக்க முடியும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. எனவே, நமது கேரக்டர் எப்படி இருக்கும் என்பதை நாமே தெரிந்து கொள்ள ஜாலியாக விளையாடும் ஒரு புதிர்தான் இது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.












Click it and Unblock the Notifications