ஃபேன்டா மேகி முதல் சாக்லேட் சமோசா வரை.. குழப்பமடையும் வாடிக்கையாளர்கள்.. வினோதமான 7 உணவுகள்
டெல்லி: இந்தியாவில் 7 விதமான வினோதமான உணவுகள் இந்த ஆண்டு வாடிக்கையாளர்களை ஆச்சரியப்பட வைத்தது.
பசிக்கு சாப்பிடும் காலம் போய் ருசிக்கு சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. துரித உணவுகளை மக்கள் அதிகம் விரும்பி உண்கிறார்கள். மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கும் போதிலும் துரித உணவுகள் விற்கும் கடைகளை வாடிக்கையாளர்கள் மொய்த்து வருகிறார்கள்.
ஹோட்டல், துரித உணவுகளை நடத்தி வருவோரும் தொழில் போட்டி காரணமாக தங்கள் படைப்புகளில் வித்தியாசத்தை புகுத்தி வருகிறார்கள். இதை பார்க்கும் இந்த உணவில் இதை சேர்க்கலாமா என வாடிக்கையாளர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு ஆகிறது.

சாக்லேட் மேகி
இதில் வினோதமான 7 உணவுகள் குறித்து பார்ப்போம். அவை சாக்லேட் மேகி, சாக்லேட் சாய், ஓரியோ பகோடா, பேன்டா மேகி, பாப்கார்ன் சாலட், மீன் மற்றும் சிப்ஸ் பீட்சா, சாக்லேட் மற்றும் ஸ்டிராபெர்ரி சமோசா ஆகியவை ஆகும். இதில் முதலில் சாக்லேட் சாய் குறித்து பார்க்கலாம். இந்த டீ மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஒரு டீக்கடையில் கிடைக்கிறது.

சாக்லேட் சிரப்
அவர்கள் டீயுடன் சாக்லேட் சிரப், மிட்டாய், சாக்லேட் ரோல் ஆகியவற்றை கலக்கிறார்கள். இதை பார்க்கும் போது ஆச்சரியமூட்டுகிறது. அடுத்தது ஓரியோ பகோடா- இது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு கடையில் கிடைக்கிறது. கடலை மாவில் ஓரியோ பிஸ்கெட்டுகளை முக்கி அதை எண்ணெயில் பொறித்து, மிளகாயுடன் வைத்து சாப்பிட்டால் டேஸ்ட் அபாரம் என்கிறார்கள்.

காசியாபாத்
3ஆவது ஐட்டம்- ஃபேன்டா மேகி.. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் சாலையோர கடை ஒன்றில் ஃபேன்டா குளிர்பானத்தில் மேகி தயார் செய்யப்படுகிறது. மேகியை கொதிக்க வைப்பதற்கு தண்ணீருக்கு பதிலாக ஃபேன்டா பானத்தை பயன்படுத்துகிறார்கள். அதனுடன் சில மசாலாக்களை சேர்த்து பரிமாறுகிறார்கள்.

பிடித்தமான உணவு
4ஆவது உணவு பொருள்- பாப்கார்ன் சாலட். பாப்கானை மயனாய்ஸில் போட்டு கிரீம், கடும், சர்க்கரை கொண்டு இந்த உணவு தயாரிக்கப்படுகிறது. 5ஆவது மீன் மற்றும் சிப்ஸ் பீட்சா- ஜப்பானில் உள்ள டொமினோஸில் இது போல் தயார் செய்யப்படுகிறது. இது பிரிட்டன் மக்களுக்கு பிடித்தமான உணவாகும்.

ஸ்டிராபெரி
6ஆவது உணவு பொருள்- சாக்லேட் மற்றும் ஸ்டிராபெரி சமோசா ஆகும். இந்த உணவு பொருள் குறித்த வீடியோவை தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா அனுப்பியிருந்தார். ஜாமை உள்ளே வைத்து ஸ்டிராபெரி சாஸ் மற்றும் சாக்லேட்டில் முக்கி எடுத்து செய்கிறார்கள். கடைசி உணவு- சாக்லேட் மேகி- இது டெல்லியில் தயார் செய்யப்படுகிறது. ஓரியோ பிஸ்கெட்டுகள் நுணுக்கி சாக்லேட் சிரப்பில் வேகப்படுகிறது. என்ன மக்களே இவைதான் இந்த ஆண்டு வினோதமான உணவுகளாகும்.












Click it and Unblock the Notifications