ஒற்றை வானமும் ஒரு பறவையும்! சுவிட்சர்லாந்தில் வெளியான தமிழ் புத்தகம்.. எங்கும் தமிழ்!
டெல்லி: சுவிட்சர்லாந்து, பேர்ன் மாகாணத்தில் அமைந்துள்ள தமிழர்களறி மண்டபத்தில் ஒற்றை வானமும் ஒரு பறவையும் என்ற கவிதை நூல் நேற்று வெளியிடப்பட்டது.
சுவிட்சர்லாந்து நாட்டில் பல நூல்களின் வெளியீட்டு நிகழ்வுகளைச் செய்து வந்த தமிழர்களறி ஆவணக் காப்பகம் 15. 10. 2023 இல் பதிப்பகமாகவும் உருவெடுத்துள்ளது. மேலும் ஈழத்துப் படைப்பாளி ஆதிலட்சுமி சிவகுமாரின் ஒற்றை வானமும் ஒரு பறவையும் கவிதை நூலைத் தனது முதற்பதிப்பாக நேற்று வெளியிட்டுள்ளது.

தாயகத்து இசைக் கலைஞர்களின் மங்கல இசையுடனும், மங்கள விளக்கேற்றலுடனும் தொடங்கிய நிகழ்வில் சிவஞானசித்தர்பீட நிறுவனர்களில் ஒருவரான திருநிறை. நடராசா சிவயோகநாதன், சைவநெறிக் கூடத்தின் ஒருங்கிணைப்பாளர் சிவருசி. தருமலிங்கம் சசிக்குமார், பேர்ன் வள்ளுவன் பள்ளி ஆசிரியர்களான திருமதி. நந்தினி முருகவேள், திரு. பொன்னம்பலம் முருகவேள், தமிழாசிரியை திருமதி. பிரேமினி அற்புதராசா, சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அரசியற்றுறைப் பொறுப்பாளர் திரு. வலந்தீஸ் கொலம்மஸ், ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் பெண் அருட்சுனையர் தனவதி மதுகரன் ஆகியோர் விளக்கேற்றினர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து, வரவேற்புரையும் வெளியீட்டுரையும் தமிழர்களறி தில்லையம்பலம் சிவகீர்த்தியால் நிகழ்த்தப்பட்டன. சிவருசி. தர்மலிங்கம் சசிகுமாரின் வாழ்த்துரையைத் தொடர்ந்து, கவிதை நூலுக்கான மதிப்பீட்டுரைகள் இடம்பெற்றன. சுக் மாநிலத் தமிழ்ப்பாடசாலை ஆசிரியை விக்னேஸ்வரி சிறீகாந்தரூபனும், போராளி செம்பருத்தியும் மதிப்பீட்டுரைகளை ஆற்றினர்.
மதிப்பீட்டுரைகளைத் தொடர்ந்து, நூல்வெளியீடு இடம்பெற்றது. நூலாசிரியர் ஆதிலட்சுமி சிவகுமார் நூலை வெளியிட்டு வைக்க சைவசித்தாந்த சித்தர்பீடம் சார்பாக சிவயோகன் நூலின் முதற் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியற்றுறைப் பொறுப்பாளர் திரு. வலந்தீஸ் கொலம்பஸ் சிறப்புரை நிகழ்த்தினார். போர்க்காலப் படைப்புகளின் சிறப்புகளையும், படைப்புகள் கொண்டிருக்க வேண்டிய மனிதத்தின் தேவைகளையும் அவர் தன்னுரையில் வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து நூலாசிரியர் உரையையும் நன்றியுரையையும் நூலாசிரியர் ஆற்றினார்.
விடுமுறை நாளிலும் இலக்கிய ஆர்வலர்களும் நண்பர்களும் திரளாகக் கலந்துகொண்டு, அரங்கை நிறைத்து வெளியீட்டு விழாவைச் சிறப்பித்தனர்.
கவிஞையும், தமிழ்ப்பாடசாலை ஆசிரியையுமான சிவதர்சினி இராகவன் நிகழ்வினை தனது அழகுதமிழில் சிறப்பாகத் தொகுத்தளித்தார். விழாவின் நிறைவாக, வருகை தந்த அனைவருக்கும் தமிழர்களறி நண்பகல் உணவளித்து, தமிழினத்தின் விருந்தோம்பற் பண்பினை வலுப்படுத்தியது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications