காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி உயர்வு.. எங்கள் அரசு கட்டுக்குள் வைத்து இருக்கிறது.. பிரதமர் மோடி
டெல்லி: காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி உயர்வு அதிகமாக இருந்தது என்றும், பாஜக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருக்கிறது என்றும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்து உரையாற்றும் போது பிரதமர் மோடி கூறினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த நிலையில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். 55 கோடி மக்களின் சுகாதார நலன் பேணப்பட்டு இருக்கிறது. சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்க வங்கிக்கடன் திட்டம் அமலாகியுள்ளது. நாட்டின் எல்லைப்பகுதி மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்று சேர்ந்துள்ளது. வளர்ச்சி திட்டங்களுக்கே பாஜக அரசு முன்னுரிமை அளிக்கும். ஏழைகளின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி.
பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும். அப்போது அடுத்த 1000 ஆண்டுகளுக்கான திட்டங்களுக்கு அஸ்திவாரம் இடும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி லோக்சபா தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் கட்டாயம் வெற்றி பெறும். இதில் பாஜக மட்டும் 370 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். பெண்களுக்கு முழு முக்கியத்துவம் கொடுக்கும் காலம் வந்துவிட்டது.
எல்லா குடும்பத்திலும் பெண்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. 3 கோடி பெண்களை பாஜக அரசு லட்சாதிபதிகளாக உருவாக்கியுள்ளது. அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பீகாரில் பட்டியில் இன மக்களுக்காக போராடிய காங்கிரஸ் அரசு ஓபிசி தலைவர்களை ஏமாற்றியுள்ளது. தேசிய ஆலோசனைக்குழுவில் காங்கிரஸ் கட்சியில் எத்தனை பேர் ஓபிசி பிரிவினர் இருந்தனர்?
அழிவுப்பாதையை நோக்கி காங்கிரஸ் செல்கிறது. முன்பு காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி உயர்வு அதிகமாக இருந்தது. ஆனால் பாஜக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications