அனுமன் தெரியுமா? அப்பாவிகளை கொன்றவர்கள் மீதே தாக்குதல்! பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங்கின் எச்சரிக்கை
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா இன்று ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இதற்கிடையே டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியப் பாதுகாப்புப் படைகள் வரலாறு படைத்துள்ளதாகவும் அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
காஷ்மீரில் கடந்த மாதம் நடந்த பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதனால் இந்தத் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி தர வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வந்தனர். அதற்கேற்ப நள்ளிரவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பகுதிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியது.

இதில் 70-80 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. மிகத் துல்லியமாக இந்திய ராணுவம் இந்தத் தாக்குதலை நடத்திக் காட்டியுள்ளது. இதற்கிடையே இந்தத் தாக்குதல் மூலம் இந்தியப் பாதுகாப்புப் படைகள் அனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ராஜ்நாத் சிங்
டெல்லியில் நடந்த 50 எல்லை சாலைகள் அமைப்பு என்ற உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் விழாவில் பங்கேற்ற பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். "பாரத் மாதா கி ஜெய்" என்ற முழக்கங்களை எழுப்பி தனது உரையைத் தொடங்கிய ராஜ் நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், இந்தியா பாதுகாப்புப் படை நம் அனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூரில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்த அவர், மிகவும் துல்லியமாகத் திட்டமிடப்பட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் நமது பாதுகாப்புப் படைகள் புதிய வரலாறு படைத்துள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அனுமர் சொன்னது போல
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் மேலும் பேசுகையில், "இந்த நடவடிக்கை நமது ராணுவ துல்லியத்தை மட்டுமல்ல, நமது தார்மீகக் கட்டுப்பாட்டையும் காட்டுகிறது. அனுமனின் வார்த்தைகளில் சொல்கிறேன்.. நமது அப்பாவிகளுக்கு மக்களுக்கு யார் தீங்கு விளைவித்தார்களோ.. அவர்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தியுள்ளோம்.
பொதுமக்கள் இருப்பிடம் மீது எந்தவொரு தாக்குதலும் நடத்தப்படவில்லை. இதனால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்த பிறகே பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியது.
வாழ்த்துகிறேன்
உங்களுக்கே தெரியும்.. நேற்று இரவு இந்தியப் படைகள் தங்கள் வீரத்தையும் துணிச்சலையும் வெளிப்படுத்தி ஒரு புதிய வரலாற்றைப் படைத்தன. இந்திய ஆயுதப் படை துல்லியம், விழிப்புணர்வு மற்றும் திறனுடன் செயல்பட்டன. திட்டமிட்ட அனைத்து இலக்குகளையும் நாங்கள் துல்லியமாகத் தாக்குதல் நடத்தியுள்ளோம். அதாவது ராணுவம் ஒரு வகையான துல்லியம், முன்னெச்சரிக்கை உடன் தாக்குதல் நடத்தியது. பொதுமக்கள் பாதிக்காத வகையில் இரக்கத்தையும் காட்டியுள்ளது. அதற்காக நான் ஒட்டுமொத்த நாட்டின் சார்பாக எங்கள் ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளை வாழ்த்துகிறேன்.
உரிமையை பயன்படுத்தியது
தனது மண்ணில் நடந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் உரிமையையே இந்தியா பயன்படுத்தி உள்ளது. பயங்கரவாதிகளின் மன உறுதியை உடைப்பதை நோக்கமாகவே இந்தத் தாக்குதல் நடத்தியுள்ளோம். எங்கள் ராணுவ நடவடிக்கை மிகவும் கவனமாக இருந்தது. இந்த ராணுவ நடவடிக்கையில் தீவிரவாத முகாம்கள் மற்றும் அவர்களின் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து மட்டும் தாக்குதல் நடத்தியுள்ளோம்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், நமது படைகள் பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மற்றும் அவற்றின் உள்கட்டமைப்புகள் மீது மீண்டும் ஒருமுறை தாக்குதல் நடத்தியுள்ளன. நமது பாதுகாப்புப் படையை முழுமையாக நம்பியதற்குப் பிரதமர் மோடிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications