மூச்சுதிணறும் இமயமலை.. வண்டி வண்டியாய் போன மக்கள்.. 3வது அலை.. திகைப்பில் மத்திய அரசு!
டெல்லி: சிம்லா, மணாலி மற்றும் மெக்லியோட் கஞ்ச் ஆகிய நகரங்களை தொடர்ந்து ரோஹ்தாங் பாஸ் நகரிலும் கோவிட் -19 விதிமுறைகள் மோசமாக மீறப்படுகின்றன. கட்டுக்கடங்காத சுற்றுலாப் பயணிகளின் பெரும் கூட்டம் காணப்படுகிறது. சமூக விலகல் மற்றும் முககவசம் அணிவது அப்பட்டமாக மீறப்படுவதால் இமாச்சல பிரதேசத்தில் அச்சம் எழுந்துள்ளது.
நம்மூரில் ஊட்டி, கொடைக்கானல் என சில மலைவாசல் தளங்களே சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலாத்தளங்கள் ஆகும், ஆனால் மொத்த இமாச்சல் பிரதேசமும் புகழ் பெற்ற சுற்றுலாதளங்கள் ஆகும். அங்கு சிம்லா, மணாலி, மெக்லியோட் கஞ்ச், ரோஹ்தாங் பாஸ் என பல பகுதிகள் மிகவும் புகழ் பெற்றவை.
டெல்லி, ராஜஸ்தான்., பஞ்சாப், குஜராத், உத்தரப்பிரதேசம் என சுற்றியுள்ள மாநிலங்களில் உள்ள மொத்த மக்களும் குவியும் சுற்றுலா தளங்கள் தான் மேலே சொன்னவை. இமயமலையில் அமைந்துள்ள சொர்க்கமான இந்த இடங்களுக்கு கடந்த மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் மக்களால் போக முடியவில்லை. இதற்கு காரணம் கொரோனா பெருந்தொற்று.

7-10 டிகிரி வெப்பநிலை
கடந்த இரண்டு வாரங்களாகத்தான் விதிமுறைகளில் தளர்வு அறிவிக்கப்பட்டதால் மக்கள் கூட்டம் அதிகரித்தது. தேனீக்களை போல் சிம்லா, மணாலி மற்றும் மெக்லியோட் கஞ்ச் நகரங்களை மொய்த்த மக்கள் அடுத்ததாக தற்போது 13,000 அடிக்கு மேல் அமைந்துள்ள ரோஹ்தாங் பாஸ் நகரத்திலும் குவிய தொடங்கி உள்ளனர். ஜம்மு காஷ்மீரின் எல்லையில் இந்த நகரத்தில் கடந்த வாரத்தில் சராசரியாக 7-10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டது.

சமூக இடைவெளி
18 மாதங்களுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்து விடப்பட்ட ரோஹ்தாங் பாஸ், ஒரு சில வாரங்களில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளது. பல்வேறு சுற்றுலா இடங்களைப் போலவே, ரோஹ்தாங்கும் கோவிட் -19 வழிகாட்டுதல்களை மீறி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரத்தொடங்கி உள்ளனர். சமூக இடைவெளி விதிமுறைகளை வெளிப்படையாக மீறி, பலர் குதிரைகள் மற்றும் யாக் சவாரி செய்வதையும் பனியில் சறுக்குவதையும் அத்துடன் செல்ஃபிக்களைக் கிளிக் செய்வதையும் காண முடிந்தது.

பயப்படமாட்டோம்
ஏன் கொரோனா விதிமுறைகளின் படி முககவசம் அணியவில்லை என்று பஞ்சாபின் மோகாவைச் சேர்ந்த ஒரு இளைஞர் கேட்டால்.. "இல்லை, நாங்கள் இன்னொரு கொரோனா அலைக்கு பயப்படவில்லை. கோவிட் ஒன்றும் இல்லை, பஞ்சாபியர்கள் கொரோனாவிற்கு அஞ்ச மாட்டார்கள்" என்று கூறுகிறார்கள். ரோஹ்தாங் பாஸுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாபிலிருந்து வந்தவர்கள் ஆவர்.

கொரோனா பயம்
இந்தியா டுடே குழுவினர் ரோஹ்தாங் பாஸ்க்கு சென்ற போது அங்கு புதிதாக திருமணமான தம்பதிகள் பாராகிளைடிங்கை அனுபவித்து கொண்டிருந்தனர். பல வருடங்களாக பாராகிளைடிங் தொழிலில் ஈடுபட்டுள்ள தாகூர் தாஸ் என்பவர் அவர்களிடம் கூறுகையில், பாராகிளைடிங் சுற்றுலா தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றார். இப்போது, இமாச்சல பிரதேசத்தில் ஜூலை 15 க்குள் கோடைக்கால நடவடிக்கைகள் முடிவடையும் என்பதால் சம்பாதிக்க இந்த மாதம் மட்டுமே வாய்ப்பு என்றார்- இந்த சாகச சுற்றுலாக்கள் கொரோனா பயம் காரணமாக கடந்த ஆண்டு நடக்கவில்லை என்கிறார் வேதனையுடன்.

அச்சம்
பாராகிளைடிங் மற்றும் ரிவர் ராஃப்டிங் தவிர, ஜிப்லைன் சவாரிகளும் மணாலியில் உள்ள ஜோடிகளிடையே பிரபலமான சாகச விளையாட்டாக மாறிவிட்டன. சூடான காற்று பலூன் சவாரி, நடைபயணம் இளைஞர்களை வெகுவாக ஈர்க்கிறது. இருப்பினும், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மூன்றாவது கோவிட் -19 அலை உயரக்கூடும் என்ற கணிப்புகள் அனைவரையும் கவலையடையச் செய்துள்ளன. சுற்றுலா இடங்களைத் திறப்பதற்கான இமாச்சலப் பிரதேச அரசாங்கத்தின் முடிவை ஹோட்டல் மற்றும் சாகச சுற்றுலாத் துறையினர் வரவேற்றனர், ஆனால் சுற்றுலா இடங்களில் அதிக மக்கள் கூட்டம் மீண்டும் கொரோனா அதிகரிக்க வழிவகுக்கும் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர். நம்ம கொடைக்கானல் ஊட்டியை திறந்தாலும் இது தான் நிலைமை, இபாஸ் ரத்து செய்தும் சுற்றுலா தளங்கள் திறக்கப்படாததால் அங்கு இன்னும் மக்கள் கூட்டம் குவியவில்லை. கொடைக்கானல் திறந்ததும் மூடப்பட்டுவிட்டது. எப்போது சுற்றுலாதளங்கள் திறக்கப்படும் என்பதையும் அரசு இதுவரை அறிவிக்கவில்லை.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications