டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

15 வகை தொழில்களுக்கு சலுகை.. லாக்டவுனுக்கு இடையேயும் செயல்படலாம்.. மத்திய அரசு அதிரடி அனுமதி

Google Oneindia Tamil News

டெல்லி: லாக்டவுன் நாளை நிறைவடைய உள்ள நிலையில், 15க்கும் அதிக வகையான தொழில் பிரிவினர், குறைந்தபட்ச ஊழியர்கள் மற்றும் சமூக விலகல் விதிமுறைகளை பின்பற்றி, ஒரே ஷிப்ட் அடிப்படையில் பணிகள் செய்ய அரசு அனுமதித்துள்ளது.

Recommended Video

    இந்திய பொருளாதாரம் பெருத்த அடி வாங்கும்.. நிபுணர்கள் கருத்து..!

    டிரான்ஸ்பார்மர்கள், சர்க்யூட் வாகனங்கள், ஆப்டிக் பைபர் கேபிள் உட்பட டெலிகாம் உபகரணங்கள், கம்ப்ரைசர் மற்றும் கன்டென்சர் பிரிவுகள், இரும்பு அலாய் ஆலைகள், நூற்பு மற்றும் ஜின்னிங் ஆலைகள், மின் தறிகள் மற்றும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு துணை யூனிட்கள், கனரக மின் பொருட்களின் உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் இதில் அடங்கும்.

    சிமென்ட் உற்பத்தி தொடர்ச்சியாக இருக்க தேவையுள்ளதால், சிமென்ட் ஆலைகள் மூன்று ஷிப்ட்களில் இயங்கக்கூடும்.

    பழக்கூழ்

    பழக்கூழ்

    மாநில டேட்டாக்கள் அடிப்படையில் கோவிட் -19 பிரச்சினை குறைவாக இருக்கும் பகுதிகளில் பழக் கூழ் மற்றும் காகித யூனிட்டுகள் மீண்டும் உற்பத்தியைத் தொடங்கலாம் என்று அனைத்து மாநில மற்றும் யூனியயன் பிரேதச செயலாளர்களுக்கு வெளியிடப்பட்ட உள்துறை அமைச்சக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொழிற்சாலைகள்

    தொழிற்சாலைகள்

    உர ஆலைகள், பெயின்ட் மற்றும் சாய உற்பத்தி, அனைத்து வகையான உணவு மற்றும் பானங்கள், விதை பதப்படுத்தும் யூனிட்டுகள், பிளாஸ்டிக் உற்பத்தி யூனிட்டுகள், வாகன உற்பத்தி பிரிவுகள், கற்கள் மற்றும் நகை துறை யூனிட்டுகள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மற்றும் ஏற்றுமதி சார்ந்த யூனிட்டுகளில் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் நாடு தழுவிய லாக்டவுன் நடவடிக்கைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

    உள்துறை அமைச்சகம்

    உள்துறை அமைச்சகம்

    சுகாதார ஆணையம் மற்றும் சுகாதார விதிமுறைகளை உறுதி செய்வதற்கான பொறுப்பு வளர்ச்சி ஆணையர்களுக்கு வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. லாக்டவுனில் இருந்து விலக்கு அளிக்க அனுமதிக்கப்பட்ட துறைகள் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சமூக விலகல் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை மாவட்ட அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்வார்கள்.

    அமைச்சரகங்கள்

    அமைச்சரகங்கள்

    லாக்டவுன் காலத்தில் மக்களின் நலனுக்காக அத்தியாவசிய பொருட்களின் விநியோக செயினை பராமரிப்பதை கருத்தில் கொண்டு அரசு இந்த வழிமுறைகளை வெளியிட்டது. இந்த நிலையில் டெல்லியில் மத்திய அமைச்சர்கள் பணிக்கு வர ஆரம்பித்துள்ளனர். அந்த துறை சார்ந்த ஊழியர்கள் குறைந்த அளவுக்கு பணிக்கு வந்துள்ளனர்.

    English summary
    Two days ahead of the lockdown's slated end, the government has permitted over 15 types of industries to start their work with minimum manpower and distancing norms on a single shift basis.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X