எடப்பாடி பழனிசாமி vs ஸ்டாலின்... சிறந்த முதல்வர் வேட்பாளர் யார்? வெளியான ஏபிபி கருத்துக்கணிப்பு
டெல்லி: தமிழ்நாட்டில் சிறந்த முதலமைச்சர் வேட்பாளராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதேபோல இடதுசாரிகள், மதிமுக, விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் திமுக இந்த முறை தேர்தலைச் சந்திக்கிறது.
இதுதவிர மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் இந்த் தேர்தலில் களமிறங்கியுள்ளன. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால், அனைத்து கட்சிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முதல்வர் வேட்பாளர்கள்
ஆளும் அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்குகிறார். இதுதவிர மக்கள் நீதி மய்யத்தின் கமல், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்டாலின் முதலிடம்
இந்நிலையில், : 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தின் சிறந்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற கருத்துக்கணிப்பை ஏபிபி வெளியிட்டுள்ளது. இதில், திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறந்த முதல்வர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக 40% மேற்பட்ட மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி
அதேநேரம் தற்போது முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 29.7% வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 48% மக்கள் தற்போதுள்ள அதிமுக ஆட்சியின் மீது கோபத்தில் இருப்பதாகவும் அவர்கள் மாற்றத்தை எதிர்பார்ப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

முக்கிய பிரச்னைகள்
மேலும், மாநிலத்தில் வேலையின்மையே முக்கிய பிரச்சினையாக உள்ளது என்று 32.8% மக்கள் கருத்து தெரிவித்தனர். அதேபோல மின்சாரம் மற்றும் நீர் பிரச்சினை இருப்பதாக 11.6% மக்களும் சட்ட ஒழுங்கில் பிரச்சனை இருப்பதாக 10.4% மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

வெற்றி யாருக்கு
மேலும், இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 161-169 இடங்கள் வரை வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அதிமுக-பாஜக கூட்டணி 53 முதல் 61 இடங்கள் மட்டுமே வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது
-
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!











Click it and Unblock the Notifications