ஒரு பக்கம் ப.சிதம்பரம்.. இன்னொருபுறம் சச்சின் பைலட்.. காங்கிரசின் தலைமை பொறுப்பிற்கு அதிரடி போட்டி
காங்கிரஸ் கட்சியில் இரண்டு முக்கியமான நபர்கள் தலைவர் பதவிக்கு அடிபோட்டு வருவதாக செய்திகள் வருகிறது.
Recommended Video
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் இரண்டு முக்கியமான நபர்கள் தலைவர் பதவிக்கு அடிபோட்டு வருவதாக செய்திகள் வருகிறது.
லோக்சபா தேர்தல் தோல்வி காரணமாக காங்கிரஸ் கட்சியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியே இதனால் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்து இருக்கிறார்.
தன்னுடைய ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி மிகவும் உறுதியாக இருப்பதாக செய்திகள் வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் புதிய தலைவர் தேர்வு செய்யப்படலாம் அல்லது செயல் தலைவர் பதவி உருவாக்கப்படலாம் என்று கூறுகிறார்கள்.

இரண்டு பேர்
காங்கிரஸ் செயல் தலைவர் பதவிக்கு மொத்தம் இரண்டு முக்கிய தலைவர்கள் போட்டி போடுகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் மற்றும் ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அல்லது செயல் தலைவர் பதவியை பெறுவதற்கு ஆசைப்பட்டுள்ளனர் என்று கூறுகிறார்கள்.

ப. சிதம்பரம் ஆசை
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலக கூடாது என்று கண்டிப்பாக சொன்னது ப. சிதம்பரம்தான். ஆனால் தற்போது காங்கிரசில் செயல்தலைவர் பதவி உருவாக்கப்பட வாய்ப்புள்ளதால் அந்த பதவியை பெற ப. சிதம்பரம் முயன்று வருகிறார். காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை சிதம்பரம் ஏற்க முடிந்தால் கட்சியில் நிறைய மாற்றங்களை இவர் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன ஆசை
ப.சிதம்பரம் தேசிய அளவில் மிக முக்கியமான அரசியல் தலைவர். இவர் தற்போது காங்கிரஸ் கட்சியின் மிக முக்கியமான மூத்த தலைவராக இருக்கிறார். ராகுலுக்கு முக்கியமான கட்டங்களில் இவர்தான் ஆலோசனை வழங்குவது. இதனால் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக ப. சிதம்பரம் பொறுப்பேற்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

சச்சின் பைலட்
அதே போல காங்கிரஸ் கட்சியில் இளம் நம்பிக்கையாக தற்போது சச்சின் பைலட் வளர்ந்து உள்ளார். இவர் தற்போது ராஜஸ்தான் துணை முதல்வராக உள்ளார். இவர் இந்தி பேசும் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வேகமாக வலுப்படுத்தி வருகிறார். இதனால் சச்சின் பைலட்டும் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

போட்டி
இவர்கள் இருவருக்கும் இடையில்தான் போட்டி இருக்கிறது. அதே சமயம் ப. சிதம்பரம் மீது நிறைய வழக்குகள் உள்ளது. ஆனால் சச்சின் பைலட் மீது அப்படி எந்த விதமான பெரிய புகாரும் இல்லை. இதனால் சச்சின் கொஞ்சம் இந்த ரேஸில் முன்னிலையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications