எந்த நேரத்தில்தான் நிர்மலா சீதாராமன் பண வீக்கம் இல்லைன்னு சொன்னாரோ.. உடனே கூடிவிட்டது: ப.சிதம்பரம்
டெல்லி: இந்தியாவில் உணவுப்பொருட்களின் பணவீக்கம் 7.6 சதவீதமாக உயர்ந்திருப்பதை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், "இப்போதாவது இதுகுறித்து கவலைப்படுவீர்களா?" என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு பணவீக்கத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என நிர்மலா சீதாராமன் பேசியிருந்த நிலையில், ப.சிதம்பரம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த மாதத்துக்கான பணவீக்கம் குறித்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டதை அடுத்து, ப. சிதம்பரம் ட்விட்டரில் அதுதொடர்பான கருத்துகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

கொரோனா பாதிப்பும் - பணவீக்கமும்
இந்தியாவில் கொரோனா ஊரடங்குக்கு பின்னர் பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது. இதனை சமாளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரிசர்வ் வங்கியும் தனது பங்குக்கு பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வந்தது. இருந்தபோதிலும், பணவீக்கம் எதிர்பார்த்த அளவுக்கு குறையவில்லை. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடா?
இது ஒருபுறம் இருக்க, உணவுப்பொருட்களின் விலை கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது கடுமையாக அதிகரித்து வருகிறது. காய்கறி, அரிசி, பருப்புப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
நாட்டில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் தான், அவற்றின் விலை உயர்ந்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இதுகுறித்து மத்திய அரசு எந்தக் கருத்தையும் கூறவில்லை. எனினும், இந்தக் கூற்றை மெய்ப்பிக்கும் விதமாக உடைத்த அரசி உள்ளிட்ட சில வகை அரிசிகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு சில தினங்களுக்கு முன்பு தடைவித்தது. மேலும், சில வகை அரிசிகளை ஏற்றுமதிக்கு அதிக அளவில் வரியும் விதித்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோதுமை ஏற்றுமதிக்கும் அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் நாட்டில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் பெரும்பாலான மக்கள் மத்தியில் நிலவுகிறது.

வந்தது பணவீக்க புள்ளிவிவரம்
இந்நிலையில்,கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கான பணவீக்க விவரங்களை தேசிய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்டது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 7 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. உணவுப் பொருட்கள் விலை அதிகமாக இருப்பதே சில்லறை பணவீக்கம் உயர்ந்ததற்கு காரணம் என கூறப்படுகிறது. பணவீக்கம் 2 சதவீதம் முதல் 6 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் என்பதே ரிசர்வ் வங்கி நிர்ணயித்திருக்கும் வரம்பு ஆகும். ஆனால், கடந்த 8 மாதங்களாகவே பணவீக்கம் தொடர்ந்து வரம்பை மீறியே சென்று கொண்டிருக்கிறது. அதிலும், ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் உயர்ந்துள்ளது. குறிப்பாக, அந்த மாதத்தில் உணவு பணவீக்கம் 7.62 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுகுறித்து பொருளாதார நிபுணர்கள் பலர் கவலை தெரிவித்து வருகின்றனர்.

ப.சிதம்பரம் கேள்வி
இந்நிலையில் பணவீக்கம் குறித்து ப.சிதம்பரம் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில், "உணவுப் பொருள்களின் பணவீக்கம் 7.62 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இப்பொழுது கூட நிதி அமைச்சர் பணவீக்கத்தைப் பற்றி கவலைப்படவில்லை என்றால் அவர் சாமானிய மக்களிடமிருந்து மிகவும் விலகி நிற்கிறார் என்ற எண்ணம் உறுதிப்படுகிறது. பணவீக்கம் என்னுடைய தலையான கவலை அல்ல என்று சில நாட்களுக்கு முன் நிதி அமைச்சர் அறிவித்தார். அவர் சொன்ன முகூர்த்தமோ என்னவோ, சில்லறைப் பணவீக்கம் 7 சதவீதம் உயர்ந்திருக்கிறது" என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

என்ன கூறினார் நிர்மலா?
அமெரிக்கா - இந்தியா தொழில் கவுன்சில் மாநாடு டெல்லியில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "நாட்டில் தற்போது சில விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். சிலவற்றுக்கு முன்னுரிமை தேவையில்லை. அதன்படி, பணவீக்கத்துக்கு இப்போது முன்னுரிமை அளிக்க வேண்டியதில்லை. பணவீக்கத்தை சில மாதங்களில் நாம் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறோம். அதனால் அதுகுறித்து பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை" என அவர் கூறியிருந்தார்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்!












Click it and Unblock the Notifications