"வினித் ஜோஷி ஒரே நேரத்தில் எப்படி 5 பதவிகளை வகித்தார்?" மத்திய கல்வி அமைச்சருக்கு ப.சிதம்பரம் கேள்வி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய கல்வித்துறை செயலராக இருந்த வினித் ஜோஷி ஒரே நேரத்தில் எப்படி 5 பதவிகளை வகித்தார் என காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பியுமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் தேர்வு முறைகேடு புகார்கள் தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தர் உள்ளிட்ட இடங்களில் நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இந்த சூழலில், மத்திய உயர்கல்வித் துறை செயலாளராக இருந்த வினீத் ஜோஷியை திடீரென இடமாற்றம் செய்து, அவருக்குப் பதிலாக நரேஷ் பால் கங்வாரை புதிய உயர்கல்வித் துறை செயலாளராக நியமித்து அமைச்சரவையின் நியமனக் குழு உத்தரவிட்டுள்ளது.

P Chidambaram

நீட் தேர்வு மோசடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவரை பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பது கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் கோரிக்கை. இந்த கோரிக்கையை முன்வைத்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்நிலையில் தான் 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை மத்திய உயர்கல்வித் துறை செயலாளராகப் பணியாற்றி வந்த வினீத் ஜோஷி அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டு தற்போது பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் எம்.பி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மத்திய கல்வி அமைச்சரிடம் நான் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன், வினித் ஜோஷி என்ற ஒரே நபர் ஏன் ஐந்து பதவிகளை வகிக்கிறார்? உயர்கல்வித் துறைச் செயலாளர், பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர், UGC தலைவர், NTA தலைவர், CBSE தலைவர் ஆகிய பதவிகளை ஏன் ஒருவரே வகிக்க வேண்டும்?

ஒரு அமைச்சர், ஒரு செயலாளர் தான் கல்வித் துறையை நிர்வகிப்பார்கள். வினித் ஜோஷி இவற்றில் சில பதவிகளைப் பொறுப்பு அடிப்படையில் வகித்திருக்கலாம். ஆனால், ஒரே நபர் மீது சுமையை ஏற்றுவதற்குப் பதிலாக, நிச்சயமாக வேறொருவரிடம் அப்பொறுப்பை ஒப்படைத்திருக்கலாம்." எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று அமைச்சரும் பதவி விலக வேண்டும். இல்லையேல் அவரை வேறு துறைக்கு மாற்ற வேண்டும் என்றும் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+