"நெஞ்சில் ஈரமுள்ள மனிதர்கள், இதை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.." வீடியோ வெளியிட்ட ப.சிதம்பரம்!
டெல்லி: நெஞ்சில் ஈரமுள்ள மனிதர்கள் இதனை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று கூறி, ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.
இந்த வீடியோ காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி பெயரில் இயங்கக்கூடிய யூடியூப் சேனலில் வெளியாகி உள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் இன்னல்கள் அதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

புலம்பெயர் தொழிலாளர்கள் குழந்தைகுட்டிகளுடன் நடந்து செல்வது, போலீஸ் தடியடி நடத்துவது, ரயில்களில் சிக்கி சிலர் மாண்டு போனது என அந்த வீடியோ பதிவு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது.
மேலும், டெல்லியில் நடந்து சென்ற குழந்தைத் தொழிலாளர்களுடன், ராகுல் காந்தி நேரில் சென்று சாலை ஓரமாக அமர்ந்து அவர்களின் குறைகளை கேட்டது, பின்னர் அவர்களை காங்கிரஸ் கட்சி சொந்த வாகனங்களில் ஏற்றி அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.
ரயிலில் அடிபட்டு தொழிலாளர்கள் உடல் துண்டாகி கிடந்தபோது, அருகே காய்ந்து போன ரொட்டித் துண்டுகள் சிதறிக்கிடந்த காட்சியும் இந்த வீடியோவில் இடம் பெற்று கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக அமைந்துள்ளது.
நெஞ்சில் ஈரம் உள்ள மனிதர்கள் இதனைக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் https://t.co/RQXGSLLtbB
— P. Chidambaram (@PChidambaram_IN) May 24, 2020
இது ஹிந்தி மொழியில் இருக்கக்கூடிய ஒரு வீடியோதான் என்றபோதிலும், எந்த மொழி மக்களாக இருந்தாலும் புரிந்துகொள்ளும் வகையில்தான் இருக்கிறது. ஆம்.. அன்பு, மனிதாபிமானம், கருணை போன்றவற்றுக்கு மொழி எது?
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications