Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா! TRF-யை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த ரூபியோ.. ஜெய்சங்கர் வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ‛தி ரெசிஸ்டன்ட் ஃப்ரண்ட்' என்ற அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தி 26 அப்பாவிகளை கொன்றனர். இந்த அமைப்பை அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாராட்டி உள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி திடீரென்று பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். குடும்பத்துடன் சுற்றுலா சென்ற ஆண்களை மட்டும் மதத்தை கேட்டு கேட்டு துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். மொத்தம் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

pakistan jaishankar us

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான ‛தி ரெசிஸ்டன்ட் ஃப்ரண்ட்' (ஆர்பிஃஎப்) பொறுப்பேற்றது.

இந்நிலையில் தான் டிஆர்எஃப் எனும் ‛தி ரெசிஸ்டன்ட் ஃப்ரண்ட்' அமைப்பை அமெரிக்கா தனது பயங்கரவாத பட்டியலில் சேர்த்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இயங்கும் பயங்கரவாத அமைப்பாக அது அடையாளப்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக நேற்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வெளியிட்ட அறிக்கையில், ‛‛இன்று வெளியுறவுத்துறை நடத்தி ஆலோசனைக்கு பிறகு ‛தி ரெசிஸ்டன்ட் ஃப்ரண்ட் என்ற அமைப்பு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியுறவுத் துறையால் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகள், நமது தேசிய பாதுகாப்பு நலன்களைப் பாதுகாப்பதற்கும், பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கும், பஹல்காம் தாக்குதலுக்கு நீதி கோரும் அதிபர் டிரம்பின் அழைப்பை அமல்படுத்துவதன் ஒரு பகுதியாக எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பயங்கரவாதத்துக்கு எதிரான டிரம்ப் நிர்வாகத்தின் உறுதிப்பாட்டை இது நிரூபிக்கிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. '' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் அமெரிக்காவின் இந்த செயலுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் துணை அமைப்பான ‛தி ரெசிஸ்டன்ட் ஃப்ரண்ட்'-யை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாகவும், அதன் பயங்கரவாதிகளை உலகளாவிய பயங்கரவாதியாகவும் அறிவித்ததற்கு அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் வெளியுறவுத்துறைக்கு பாராட்டுகள். ஏப்ரல் 22 பஹல்காம் தாக்குதலுக்கு அது பொறுப்பேற்றுள்ளது. பயங்கரவாதத்திற்கு எந்த சகிப்புத்தன்மையும் இல்லை'' என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛‛பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திலும், பயங்கரவாத உள்கட்டமைப்பை அழிப்பதிலும் உலகளவில் ஒத்துழைப்பின் அவசியத்தை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஆழமான ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில், ‛தி ரெசிஸ்டன்ட் ஃப்ரண்ட்' அமைப்பின் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகம் சார்பில், ‛‛இது பயங்கரவாத எதிர்ப்பில் இந்தியா - அமெரிக்கா இடையேயான பலமான பந்தத்தை காட்டுகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+