தீவிரவாதிகளின் தடையமே கிடைக்கல.. ஹமாஸ் பயன்படுத்திய டெக்னிக்! விசாரணையில் ஷாக்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு புதிய தொழில்நுட்ப முறைகளை பின்பற்றி இருப்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. எனவேதான் அவர்களை பின்தொடர முடியவில்லை என சொல்லப்படுகிறது.
இதுபோன்ற தொழில்நுட்பத்தை ஹமாஸ் அமைப்பு பயன்படுத்தியது. இதை வைத்துதான் இஸ்ரேலை தாக்கியது. இப்போது இதே யுக்தி ஜம்மு காஷ்மீரிலும் பயன்படுத்தப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் என்கிரிப்ட் செய்யப்பட்ட மெசேஜிங் செயலிகளை பயன்படுத்தி தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். இந்த செயலியை பயன்படுத்த மொபைல் இன்டெர்நெட் அவசியமில்லை. ஏன் டவர் கூட வேண்டியதில்லை. சிம் கார்டே இல்லை என்றாலும் கூட இதை பயன்படுத்த முடியும்.
ப்ளூடூத்
வைஃபை ஹாட்ஸ்பாட்
மெஷ் நெட்வொர்க்
இந்த மூன்று முறைகளில்தான் தீவிரவாதிகள் தங்களுக்குள் தகவலை பரிமாறியிருப்பார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு Bridgefy எனும் செயலியை எடுத்துக்கொள்ளுங்கள். இது ப்ளூடூத் வழியாக தகவலை பரிமாற்ற உதவும் செயலியாகும். இந்த தகவல் என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும். அதாவது நீங்கள் அனுப்பும் தகவல் ஒரு பெட்டியில் வைத்து பூட்டப்படுகிறது என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள். பெட்டிக்கான சாவி ஒன்று உங்களிடம் இருக்கும். மற்றொன்று பெட்டியை பெறுபவரிடம் இருக்கும். இடையே பெட்டி திருடப்பட்டாலும் உள்ளே இருக்கும் தகவலை படிக்க முடியாது.
மற்றொரு செயலி Briar. இதுவும் ப்ளூடூத் மற்றும் வைஃபை வழியாக இயங்குகிறது. 50-100 மீட்டருக்கு இடைப்பட்ட தூரத்தில் இந்த செயலி மூலம் தகவல்களை பகிர்ந்துக்கொள்ள முடியும். இதற்கு இன்டெர்நெட், ரேடியோ உள்ளிட்டவை தேவையில்லை என்பதால் தகவல்களை இடைமறிக்க முடியாது. ஏன், தகவல் பரிமாற்றம் நடப்பது கூட நமக்கு தெரியாது. FireChat என இன்னொரு செயலி இருக்கிறது. இது மெஷ் நெட்வொர்க் மூலம் குரூப் சாட் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
இவற்றையெல்லாம் ராணுவம் மட்டுமே பயன்படுத்தும். வாசகர்கள் முயன்று பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவற்றை பயன்படுத்திதான் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். எனவேதான் அவர்கள் பற்றிய தகவல்களை கண்டுபிடிக்க நமக்கு கூடுதல் நேரம் எடுக்கிறது.
இந்த தாக்குதல் நமக்கு புதிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் புதிய பயங்கரவாத உத்திகள் உருவாகின்றதோ? என்று கேள்வி எழுந்திருக்கிறது. இதே நிலைமை நீடித்தால் எதிர்காலத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதலை முன்கூட்டியே கணிப்பது சிரமமாகும்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications