Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முஸ்லிம் VS இந்து.. காஷ்மீர் தாக்குதலை கண்டிக்காமல் மதத்தை இழுத்து சோனியா மருமகன் கருத்து.. சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியாகினர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள மிக முக்கிய சுற்றுலா தலமாக பஹல்காம் உள்ளது. இங்குள்ள புல்மேடு பகுதியில் நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் நிறையபேர் சென்றனர். அப்போது 4 பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

terror attack jammu kashmir robert vadra

விட்டுவிடும்படி கெஞ்சியும் கூட மனம் இறங்காமல் அப்பாவி மக்களை இந்த பயங்கரவாதிகள் கொன்று குவித்தனர். மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர். ஆனாலும் பலரும் எச்சரிக்கையாக சம்பவ இடத்தில் இருந்து ஓடியதால் அதிர்ஷ்டவசமாக தப்பித்தனர்.

இந்த தாக்குதலுக்கு எல்இடி எனும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளையாக செயல்படும் ‛தி ரெசிஸ்டென்ட் ஃப்ரண்ட்' என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பாகும். பாகிஸ்தான் இருந்து தான் இந்த அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். இவர்களின் செயல்பாட்டை அறிந்து ஏற்கனவே இந்த அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இப்படியான சூழலில் தான் ஜம்மு காஷ்மீரில் அப்பாவி மக்கள் 26 பேரை கொன்று குவித்துள்ளது அந்த பயங்கரவாத கும்பல்.

இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி உள்பட மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், உலக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது கோழைத்தனமான தாக்குதல் என்று கூறியுள்ளனர். இதற்கிடையே தான் இந்த தாக்குதல் தொடர்பாக சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராபர்ட் வதேரா தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛நம் நாட்டில் இந்த அரசு இந்துத்துவா பற்றி பேசி வருகிறாது. இது சிறுபான்மையினருக்கு சங்கடப்படுத்துகிறது. அதோடு பதற்றத்தை உணர வைக்கிறது. இப்போது நடந்த பயங்கரவாத தாக்குலை ஆராய்ந்தால் அவர்கள் மக்களின் அடையாளத்தை பார்க்கிறார்கள் என்று சொல்லப்படுகம் சங்கடமாகவும், பதட்டமாகவும் உணர்கிறார்கள்.

நடந்த இந்த பயங்கரவாதச் செயலை ஆராய்ந்தால் அவர்கள் மக்களின் அடையாளத்தைப் பார்க்கிறார்கள் என்று சொல்கின்றனர். அப்படியென்றால் அவர்கள் ஏன் இதை செய்கிறார்கள்? ஏனென்றால், நம் நாட்டில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு பிளவு ஏற்பட்டுள்ளது.

இது சில அமைப்புக்கு நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் இந்துக்கள் தான் பிரச்சனையாக மாறுகிறார்கள் என்பதை உணர வைக்கிறது. ஒருவரின் அடையாளங்களைப் பார்த்துவிட்டு ஒருவரைக் கொல்வது என்பது பிரதமருக்கான செய்தி. ஏனென்றால் முஸ்லிம்கள் பலவீனமாக உணர்கிறார்கள். சிறுபான்மையினர் பலவீனமாக உணர்கிறார்கள். நம் நாட்டில் நாம் பாதுகாப்பாகவும், மதசார்பற்றவர்களாகவும் உணர்கிறோம் என்பது மேலிடத்திலிருந்து வர வேண்டும். அப்போது தான் இதுபோன்ற செயல்கள் நடப்பதை நாம் பார்க்க மாட்டோம்'' என்று கூறியுள்ளார். இது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ஏனென்றால் இந்த தாக்குதலின்போது பயங்கரவாதிகள் ஒவ்வொருவரிடமும் இந்துவா? என்று கேட்டு ஆண்களை மட்டும் கொன்றுள்ளனர்.துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பு சிலரது அடையாளங்களை காண பேண்ட்டுகளை பயங்கரவாதிகள் கழற்றி பார்த்ததாக பெண் ஒருவர் பேட்டியளித்தார். இதனை குறிப்பிட்டு தான் ராபர்ட் வதேரா இந்த பதிவை செய்துள்ளார். இப்படியான சூழலில் தான் ராபர்ட் வதேரா அந்த பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கும் வகையில் ஒரு வார்த்தை கூட கூறவில்லை என்பது சர்ச்சையாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+