போரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே பாகிஸ்தான் செயல்பட்டது.. இந்திய ராணுவம் குற்றச்சாட்டு!
டெல்லி: "போரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே பாகிஸ்தான் படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தின. இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய அனைத்துத் தாக்குதல்களும் தோல்வியில் முடிந்தன." என முப்படை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முப்படை அதிகாரிகள் பேசுகையில், "பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவத் தளங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. இந்திய ராணுவம் தீவிரவாதிகளை மட்டுமே குறிவைத்தது. ஆனால், அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய பயங்கரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்ட ராணுவ நடவடிக்கையாகும். இதன்மூலம், பயங்கரவாத செயல்களுக்கு சதித்திட்டம் தீட்டியவர்களும் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதில் அங்கிருந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்திய தேசம் பயங்கரவாதச் செயல்களை சகித்துக்கொள்ளாது என்பதையே மீண்டுமொருமுறை தெரிவித்துக் கொள்கிறோம்.
பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கியதால் பதிலடி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நேற்று உடன்பாடு எட்டப்பட்ட 2 மணி நேரத்திலேயே மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது" எனத் தெரிவித்துள்ளார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications