இந்த பவரை வச்சுக்கிட்டுதான்.. இந்தியாவோடு போருக்கு போகிறீர்களா? பாகிஸ்தான் செய்த காமெடி!
சென்னை: இந்தியா பாகிஸ்தான் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் நடக்கலாம் என்று கூறப்படும் நிலையில்தான் பாகிஸ்தான் விமானப்படையின் செயல் ஒன்று பலரையும் சிரிக்க வைத்துள்ளது.
கடந்த 4 நாட்களுக்கு முன் இந்திய விமானப்படை விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் செல்ல முயன்றதாக பாகிஸ்தான் தெரிவித்தது. ஆனால் இதில் உண்மை இல்லை என்று பின்னர் நிரூபிக்கப்பட்டது. அதோடு பாகிஸ்தான் இதில் பொய் சொல்லி வந்ததும் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் பாகிஸ்தான் ராணுவம் இப்போது ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளது. அதில் விமானப்படை அதிகாரிகள் அங்கே உள்ள புதிய தொழில்நுட்பங்களை ஆய்வு செய்வதாக காட்சிகள் உள்ளன.
அதாவது விமானப்படை அதிகாரிகள் விமான ரேடார் சிஸ்டங்களை ஆய்வு செய்வதாக காட்சிகள் உள்ளன. அதிலும் ரேடார் சிஸ்டத்தில் புதிதாக இணைக்கப்பட்டு உள்ளன தொழில்நுட்பங்களை அவர் ஆய்வு செய்வதாக காட்சிகள் உள்ளன. இதுதான் கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது. ஏனென்றால் அந்த வீடியோவில் பாகிஸ்தான் ராணுவம் காட்டி இருப்பதை flightradar24 என்ற பக்கத்தின் காட்சிகள் ஆகும். இது flightradar24 எனப்படும் இலவச இணைய பக்கம் ஆகும். யார் வேண்டுமானாலும் இதை ஓபன் செய்து விமானங்களை பார்க்கலாம்.
சில போர் விமானங்கள் தவிர மற்ற விமானங்களின் விவரங்கள் எல்லாம் இதில் இருக்கும். பிரீமியம் முறை எடுத்தால் இன்னும் பல விவரங்களை பார்க்கலாம். உதாரணமாக உங்கள் மேல் ஒரு விமானம் பறந்தால் flightradar24 ஓபன் செய்து மேப்பில் உங்கள் பகுதிக்கு சென்று மேலே சென்ற விமானத்தை பற்றிய விவரங்களை அறியலாம்.

ஆனால் இதை போய் விமானப்படை ரேடார் சிஸ்டத்தில் புதிதாக இணைக்கப்பட்டு உள்ளன தொழில்நுட்பம் என்று கூறி பாகிஸ்தான் விமானப்படை அதிகாரிகள் ஆய்வு செய்தது கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் நடக்கலாம் என்று கூறப்படும் நிலையில்தான் பாகிஸ்தான் விமானப்படையின் இந்த செயல் பலரையும் சிரிக்க வைத்துள்ளது. இந்த பவரை வச்சுக்கிட்டுதான்.. இந்தியாவோடு போருக்கு போகிறீர்களா? என்று பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
இரண்டு நாட்டு பவர்:
செயலில் உள்ள ராணுவப் பணியாளர்கள்:
இந்தியா: ~1.45 மில்லியன்
பாகிஸ்தான்: ~654,000
பாதுகாப்பு பட்ஜெட்:
இந்தியா: ~$81 பில்லியன்
பாகிஸ்தான்: ~$11 பில்லியன்
ராணுவ பலம்
டாங்கிகள்:
இந்தியா: ~4,800
பாகிஸ்தான்: ~3,700
கவச வாகனங்கள்:
இந்தியா: ~12,000
பாகிஸ்தான்: ~10,000
பீரங்கி (மொத்தம்):
இந்தியா: ~7,500+
பாகிஸ்தான்: ~4,300+
விமானப்படை
மொத்த விமானம்:
இந்தியா: ~2,200
பாகிஸ்தான்: ~1,400
போர் விமானங்கள்:
இந்தியா: ~600 (Su-30MKI, Rafale, Tejas போன்றவை)
பாகிஸ்தான்: ~430 (JF-17, F-16, முதலியன)
ஹெலிகாப்டர்கள்:
இந்தியா: ~800+
பாகிஸ்தான்: ~300+
போக்குவரத்து விமானம்:
இந்தியா: ~250+
பாகிஸ்தான்: ~70+
கடற்படைப் படைகள்
மொத்த கடற்படை சொத்துக்கள்:
இந்தியா: ~295
பாகிஸ்தான்: ~114
விமானம் தாங்கிகள்:
இந்தியா: 2 (ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ஐஎன்எஸ் விக்ராந்த்)
பாகிஸ்தான்: 0
நீர்மூழ்கிக் கப்பல்கள்:
இந்தியா: 17 (அணுசக்தியில் இயங்குவது உட்பட)
பாகிஸ்தான்: 9 (டீசல்-மின்சாரம்)
போர்க்கப்பல்கள் மற்றும் அழிப்பான்கள்:
இந்தியா: ~30+
பாகிஸ்தான்: ~10+
அணுசக்தி திறன்
அணு ஆயுதங்கள்:
இந்தியா: ~160
பாகிஸ்தான்: ~165
விநியோக அமைப்புகள்:
இந்தியா: நிலம், காற்று, கடல் சார்ந்தது
பாகிஸ்தான்: முதன்மையாக நிலம் மற்றும் வான் அடிப்படையிலானது
அணு கோட்பாடு:
இந்தியா: முதல் பயன்பாட்டுக் கொள்கை இல்லை
பாகிஸ்தான்: அறிவிக்கப்பட்ட கொள்கை இல்லை (தெளிவற்ற நிலைப்பாடு)
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications