இந்திய பெண்ணுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு திருமணம்! இந்துவில் இருந்து முஸ்லிமாக மாறும் பூஜா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ராசா ஹாசன், இந்தியாவை சேர்ந்த இந்து பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். இந்த பெண் இந்துவாக இருந்து முஸ்லிமாக மாற ரெடியான நிலையில் இருவருக்கும் அமெரிக்காவின் நியூயார்க்கில் திருமண நிச்சயத்தார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இருவருக்கும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் அந்த பெண் யார்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியா - பாகிஸ்தான்.. ஒரு காலத்தில் ஒரே நாடாக இருந்த நாம் தற்போது தனித்தனி நாடாக இருக்கிறோம். அதோடு ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நமக்கும், பாகிஸ்தானுக்கும் மனஸ்தாபம் இருந்து வருகிறது. இருப்பினும் கூட எல்லை தாண்டி பாகிஸ்தான் - இந்தியர்கள் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.

raza hassan cricket pakistan

சாதாரண மக்கள் முதல் விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பினர் எல்லை தாண்டி திருமண வாழ்க்கையில் இணைந்து வருகின்றன. குறிப்பாக பாகிஸ்தான் நாட்டின் கிரிக்கெட் வீரர்கள் இந்திய பெண்களை திருமணம் செய்து கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் பாகிஸ்தான் மாஜி கேப்டன் சோயிப் மாலிக் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை திருமணம் செய்தார். தற்போது இருவரும் பிரிந்துள்ளனர். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் ஹாசன் அலி ஹரியானாவை சேர்ந்த சாமியா அர்ஜோ என்பவரை திருமணம் செய்தார். முன்னாள் கிரிக்கெட் வீரர் மோஷின் கான் நடிகை ரீனா ராய், முன்னாள் வீரர் ஜாகீர் அப்பாஸ் - ரிதா என்பவை திருமணம் செய்தார். இப்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இந்திய பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

அந்த வரிசையில் தற்போது இணைய இருப்பவர் தான் ராசா ஹாசன். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான ராசா ஹாசன் அந்த நாட்டுக்காக ஒரு ஒரு நாள் போட்டி, 10 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஒருநாள் போட்டியில் ஒரு விக்கெட்டும், டி20 போட்டிகளில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார். இவர் கடந்த 2012ம் ஆண்டு பாகிஸ்தான் டி20 உலககோப்பை அணியில் இடம்பெற்றிருந்தார். அதன்பிறகு அவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதையடுத்து ராசா ஹாசன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். தற்போது 32 வயது நிரம்பிய ராசா ஹாசன் 32 வயது நிரம்பிய இந்திய பெண் பூஜா போமனை திருமணம் செய்ய உள்ளார். இவர்களின் திருமண நிச்சயத்தார்த்தம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து முடிந்துள்ளது. பூஜா போமன் இந்தியாவை சேர்ந்தவர் என்றாலும் கூட அவரும் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

இதுதொடர்பாக ராசா ஹாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‛‛நான் நிச்சயத்தார்த்தம் செய்து கொண்டதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். என் வாழ்க்கையின் என்றைக்குமான காதலாக இருக்க வேண்டும் என்று நான் கேட்டதற்கு அவள் ஆம் என்று பதில் அளித்தாள். எதிர்கால வாழ்க்கையில் வரும் சாகச பயணங்களை இருவரும் ஒன்றாக எதிர்கொள்வதில் ஆர்வமாக இருக்கிறேன். எங்களின் திருமணம் அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்துக்குள் நடைபெறும்'' என தெரிவித்துள்ளார்.

ராசா ஹாசன் திருமணம் செய்யும் இந்திய பெண்ணான பூஜா போமன், இந்து மதத்தை சேர்ந்தவர். இவர் வருங்கால கணவர் ராசா ஹாசனின் இஸ்லாம் மதத்தின் மீது ஈடுபாடு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் விரைவில் இந்துவில் இருந்து முஸ்லிமாக மாற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+