மன்னிப்பு கேக்குறத விட்டுட்டு.. சுற்றி வளைத்து பேசும் பாகிஸ்தான்! வார்னிங் கொடுத்த இந்தியா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அரபிக்கடல் பகுதியில் இந்திய கடற்படை கப்பல் மீது பாகிஸ்தானிய கடற்படை கப்பல் உரசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது சர்வதேச சட்ட மீறலாகும். ஆனால், இந்த விஷயத்தில் பாகிஸ்தான் மன்னிப்பு கேட்காமல்.. வழ வழ, கொழ என பாகிஸ்தான் பேசி வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் அளித்துள்ள பதிலையும் அதன் குற்றச்சாட்டுகளையும் இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், பாகிஸ்தானிடமிருந்து எப்போதும் போல விவகாரத்தை இழுத்தடிக்கும் அதே பழைய பாணியையே எதிர்பார்த்ததாக காரசாரமாக பதிலடி கொடுத்தார்.

Pakistan dodges apology

கப்பல்கள் மோதிக்கொண்ட சம்பவம்

கடந்த செப்.15ம் தேதி மாலை மேற்கு அரபிக்கடலில் இந்திய கடற்படையின் அதிநவீன போர்க்கப்பலான ஐஎன்எஸ் கொல்கத்தா வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது அங்கு வந்த பாகிஸ்தான் கடற்படை கப்பலான பிஎன்எஸ் ஹுனைன், மிக அபாயகரமான முறையிலும் கடற்படை விதிகளுக்கு புறம்பாகவும் அதிவேகமாக இந்திய கப்பலை முந்த முயன்றது. இந்த பாதுகாப்பற்ற நகர்வின் காரணமாக இரு கப்பல்களும் எதிர்பாராத விதமாக ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.

ஒப்பந்த மீறல்

பாகிஸ்தானின் இந்த செயல் சர்வதேச மற்றும் இருதரப்பு விதிமுறைகளை முற்றிலும் மீறிய ஒன்று என்று இந்தியா சுட்டிக்காட்டியிருக்கிறது. அதாவது 1991 ஏப்ரலில் இந்தியா-பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்பட்ட ராணுவ பயிற்சிகள் மற்றும் நகர்வுகள் தொடர்புடைய ஒப்பந்தத்தின் பிரிவு 10ஐ பாகிஸ்தான் கப்பல் அப்பட்டமாக மீறியுள்ளது. இந்த விதியின்படி, கடலில் இரு நாட்டு ராணுவ கப்பல்களும் குறைந்தபட்சம் 3 கடல் மைல் தூர இடைவெளியை பேண வேண்டும்.

இது தவிர கடலில் கப்பல்கள் மோதிக்கொள்வதை தடுப்பதற்கான சர்வதேச கடல்சார் விதிகளையும் பாகிஸ்தான் கப்பல் மீறியுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியை நேரில் அழைத்து இந்தியா தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+