என்ன ஒரு ஆணவம்.. வரலாற்றில் முதல்முறையாக.. எல்லையில் பாகிஸ்தான் செய்த காரியம்.. இந்தியா தந்த பதிலடி
டெல்லி: பாகிஸ்தான் பொதுவாக எல்லை கடந்த தாக்குதல்களை ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்வது வழக்கம். ஆனால் இந்த முறை சர்வதேச எல்லையில் இந்த தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டு உள்ளது.
ஜம்முவின் பராக்வால் செக்டாரில் உள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் முதல் முறையாக எல்லை தாண்டி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. போர் இல்லாத நேரத்தில் இந்திய வரலாற்றில் இப்படி பாகிஸ்தான் சர்வதேச எல்லை கோட்டை மீறி தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை.
சர்வதேச எல்லை என்பது இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள எல்லையில் சர்வதேச நாடுகள் மூலம் ஒப்புதல் பெற்ற எல்லை ஆகும். அதாவது சில எல்லை பகுதிகள் உள்நாடுகள் மட்டும் அங்கீகரிக்கப்பட்டு இருக்கும். சில எல்லை பகுதிகள் எதிரி நாடுகளால் மட்டும் அங்கீகரிக்கப்பட்டு இருக்கும். ஆனால் இது போன்ற சர்வ்தேச எல்லைகள் என்பது சர்வதேச கூட்டமைப்பு, உலக நாடுகள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட எல்லை ஆகும்.

இங்குதான் ஜம்முவின் பராக்வால் செக்டாரில் உள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் முதல் முறையாக எல்லை தாண்டி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. அதேபோல் பாகிஸ்தான் ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
இதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் தொடர்ச்சியாக ஆறாவது நாளாக எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூட்டை பாகிஸ்தான் நடத்தி உள்ளது. இதற்கு இந்தியா உடனுக்குடன் பதிலடி கொடுத்தது. நேற்று நடத்திய தாக்குதலுக்கு இந்தியா பதிலடி தாக்குதல்களை நடத்தியது. சுமார் 40 நிமிடங்கள் இரண்டு பக்கமும் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது.
இரண்டு நாட்டு மோதல்
இந்தியா பாகிஸ்தான் இடையே நிலைமை மோசமாகி உள்ள நிலையில் இரண்டு நாடுகளுக்கும் அமெரிக்கா முக்கியமான மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த வாரம் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ஆயுதப்படைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி முழு செயல்பாட்டு சுதந்திரத்தை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பிரதமர் கூட்டிய உயர்மட்டக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
90 நிமிடம் நீடித்த இந்தக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் மற்றும் முப்படைத் தளபதிகள் - ராணுவத் தலைமை ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தலைமை அட்மிரல் தினேஷ் கே திரிபாதி மற்றும் விமானப்படைத் தலைமை மார்ஷல் அமர் ப்ரீத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மோடி தந்த பவர்
தீவிரவாதத்திற்கு அழிவு தரும் அடியை கொடுக்க உங்களுக்கு அதிகாரம் உள்ளது. இதற்கான முழு அதிகாரம் உங்களுக்கு தருகிறோம். இந்திய ஆயுதப் படைகளின் திறன்களில் எனக்கு முழு நம்பிக்கையை உள்ளது,. உங்களுக்கு ராணுவ தாக்குதல் திட்டமிடலில் முழு அதிகாரம், சுதந்திரத்தை தருகிறோம் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார்.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் அளித்த பேட்டியில், பாகிஸ்தான் மீது இந்தியா உடனடியாக பதிலடி தாக்குதல் நடத்த வாய்ப்புகள் உள்ளன. பாகிஸ்தான் படைகளை தயாராக இருக்க சொல்லி இருக்கிறேன். இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என்பதால் எங்கள் படைகளை பலப்படுத்தியுள்ளோம்.
இது போன்ற சூழ்நிலையில் சில மூலோபாய முடிவுகளை எடுக்க வேண்டும், எனவே அந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியா நம் மீது தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பாகிஸ்தான் ராணுவம் எங்கள் நாட்டு அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது. இதை பற்றிய கூடுதல் விவரங்களை சொல்ல முடியாது. ஆனால் இந்திய ராணுவத்தின் தாக்குதல் ஊடுருவல் உடனடியாக நடக்க வாய்ப்புகள் உள்ளன, என்று பாக். பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் பேசி உள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications