பாகிஸ்தான் டிரோன் அட்டாக்கை தவிடுபொடி ஆக்கிய இந்திய ராணுவம்.. விடிய விடிய நடந்தது என்ன?
டெல்லி: பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்களை இந்தியப் படைகள் அசாத்திய முயற்சிகளால் முறியடித்துள்ளன. விடிய விடிய பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்திய நிலையில் நடுவானிலேயே அவற்றை தாக்கி அழித்துள்ளது இந்திய ராணுவம்
வெடிகுண்டுகளுடன் பல ட்ரோன்களை அனுப்பி இந்தியாவின் மேற்கு எல்லையை தாக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. பாகிஸ்தானின் அனைத்து விதமான அத்துமீறல்களுக்கும் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் போர் சூழல்
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தியாவில் உள்ள பொது மக்களின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருவதால் போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்திய நிலையில் இந்தியாவில் உள்ள மக்களின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.
குறிப்பாக எல்லை பகுதிகளில் உள்ள ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. காஷ்மீர் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு தொடங்கிய இரு ராணுவத்திற்கும் இடையிலான சண்டை விடிய விடிய நடந்துள்ளது.
விடிய விடிய சண்டை
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, சியால்கோட் நகரங்களிலும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி முடிந்தவரை கட்டுப்படுத்தி வருகிறது. பாகிஸ்தானின் வர்த்தக தலைநகராக கராச்சி பகுதிகளிலும் இந்தியா வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி உள்ளது.
ஜம்மு, பதான்கோட், உதம்பூர் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த ராணுவத் தளங்கள் அமைந்துள்ள பகுதிகளை பாகிஸ்தான் குறிவைத்திருந்தது. அண்மையில் ஆபரேஷன் சிந்தூர் வாயிலாக பயங்கரவாதிகள் முகாம்களை அழித்து இந்தியா கொடுத்த பதிலடிக்கு எதிர்வினையாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எல்லைக்குள் விடாத எஸ்-400
பாகிஸ்தானின் திடீர் வான்வழித் தாக்குதல் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, இந்திய பாதுகாப்புப் படைகள் முழுமையான தயார்நிலையுடன் உடனடியாகச் செயல்பட்டன. இந்தியாவின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்பான எஸ்-400, எந்த ஒரு ஊடுருவலையும் அனுமதிக்காத வகையில் அசத்தலாகப் பணியாற்றியுள்ளது.
வானில் பறந்து வந்த அனைத்து ஆளில்லா விமானங்களையும், அத்துடன் அனுப்பப்பட்ட சில ஏவுகணைகளையும் துல்லியமாக இடைமறித்து அழித்தது எஸ்.-400. இதன் காரணமாக, ஒரு டிரோன் கூட இந்திய வான் எல்லைக்குள் நுழையவில்லை.
டிரோன்கள் அந்தரத்திலேயே சுட்டு வீழ்த்தப்பட்டன
இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து இந்தியா நோக்கி வந்த மூன்று போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. அதிநவீன வசதிகளுடன் பாகிஸ்தான் போர் விமானங்களை இந்தியா வீழ்த்தியது. பாகிஸ்தானும் ட்ரோன்களை அனுப்பிய நிலையில் அதனை நடுவானிலேயே இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்களை இந்தியப் படைகள் முறியடித்த வீடியோவை வெளியிட்டுள்ளது இந்திய ராணுவம். இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு டிரோனை சுட்டு வீழ்த்தும் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள பதிவில், "பாகிஸ்தான் ஆயுதப்படைகள் மே 8 மற்றும் 9, 2025 அன்று இரவு முழுவதும் மேற்கு எல்லையிலும் ட்ரோன்கள் மற்றும் பிற வெடிமருந்துகளைப் பயன்படுத்தி பல தாக்குதல்களை நடத்தின. ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் துருப்புக்கள் ஏராளமான போர்நிறுத்த மீறல்களையும் (CFV) மேற்கொண்டன.
பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்கள் திறம்பட முறியடிக்கப்பட்டன, மேலும் போர் நிறுத்த மீறல்களுக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. இந்திய இராணுவம் நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. அனைத்து தீய நோக்கங்களுக்கும் பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications