மன்மோகன் சிங் மரியாதைக்குரியவர்... பாகிஸ்தான் அமைச்சர் திடீர் புகழாரம்
Recommended Video
டெல்லி: நவம்பர் மாதம் நடைபெறவுள்ள கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவில் பங்கேற்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுப்போம் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
சீக்கிய மதத் தலைவரான குருநானக்கின் பிறந்தநாளையொட்டி, பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருத்வாராவுக்கு சீக்கிய யாத்ரீகர்கள் சென்று வருவது வழக்கமாகும். யாத்ரீகர்கள் சிரமமின்றி பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தில் இருந்து பாகிஸ்தானின் கர்தார்பூர் வரை சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் அந்தப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு அடுத்த மாதம் 9-ம் தேதி கர்தார்பூர் வழித்தடத்தை திறக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது. அந்த விழாவில் பங்கேற்குமாறு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுப்போம் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரைஷி தெரிவித்துள்ளார். மேலும், மன்மோகன் சிங் மீது தாங்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும், அவர் மரியாதைக்குரிய நபர் எனவும் புகாழரம் சூட்டியுள்ளார்.
சீக்கிய மக்களின் பிரதிநிதியாக மன்மோகன் சிங்கை தாங்கள் அழைக்க உள்ளதாகவும், முறைப்படி எழுத்துப்பூர்வமாக அழைப்பு விடுப்போம் எனவும் குரைஷி கூறியிருக்கிறார். கர்தார்பூரில் நடைபெறும் குருநானக்கின் பிறந்தநாள் விழாவில் அனைத்து சீக்கியர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்பதே தமது விருப்பம் என பாக்.வெளியுறவுத்துறை அமைச்சர் குரைஷி தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே பாகிஸ்தான் அரசிடம் இருந்து அழைப்பு வந்தால் அதனை மன்மோகன் சிங் நிச்சயம் நிராகரித்து விடுவார் என்றும், குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் அமைச்சர் இப்படி பேசியுள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். மேலும், அவர் பிரதமராக இருந்த பத்தாண்டு காலத்தில் கூட பாகிஸ்தானுக்கு சென்றதில்லை என கூறியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications