கொடூரம்.. டெல்லி உயர் கமிஷனை.. கிட்டத்தட்ட உளவு கூடாரமாகவே மாற்றிய பாகிஸ்தான்.. மோசமான வேலை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் இருக்கும் பாகிஸ்தான் உயர் கமிஷனை அந்த நாட்டு அதிகாரிகள் கிட்டத்தட்ட ஒரு உளவு கூடாரம் போல பயன்படுத்தி உள்ளதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் கமிஷனில் இருந்து அதிகாரி ஒருவர் நேற்று வெளியேற்றப்பட்டார். அடுத்த 24 மணி நேரத்தில் அவர் நாட்டை விட்டே வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அவர் தனது உயர் கமிஷன் வேலையை தாண்டி வேறு சில வேலைகள் பார்த்ததாக கூறி வெளியேற்றப்பட்டு உள்ளார்.

அவர் உளவு பார்த்ததாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது சமீபத்தில் வடஇந்தியாவில் பல உளவாளிகள் கைது செய்யப்பட்டதில் அவருக்கும் தொடர்பு இருப்பதாக.. அவர்கள் வழியாக அவர் உளவு பார்த்ததாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உளவு கூடாரம்

இதன் மூலம் டெல்லியில் இருக்கும் பாகிஸ்தான் உயர் கமிஷனை அந்த நாட்டு அதிகாரிகள் கிட்டத்தட்ட ஒரு உளவு கூடாரம் போல பயன்படுத்தி உள்ளதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. உயர் கமிஷன் என்பது கிட்டத்தட்ட தூதரகம் போல செயல்படும். இரண்டு நாட்டு உறவு தொடர்பான முடிவுகளை எடுக்க, ஆலோசனைகளை செய்ய, அந்த நாட்டில் உள்ள தங்கள் மக்களுக்கு ஆலோசனைகள், உதவிகளை வழங்க இந்த கமிஷன் அமைக்கப்படும்.

Pakistan made the Delhi High Commission as a spy center almost

மிக மிக மோசமான போர் சூழலில் இந்த கமிஷனில் சில உளவாளிகள் இருப்பார்கள். அதே சமயம் ரஷ்யா - அமெரிக்கா போன்ற நாடுகள் தங்களின் பரஸ்பர கமிஷனில் உளவாளிகளை அனுப்புவதும், அந்த உயர் கமிஷனையே பக் வைத்து இரண்டு நாடுகளும் மாறி மாறி ஒட்டுக்கேட்பதும் கூட அடிக்கடி நடப்பது வழக்கம்.

அதேபோன்ற ஒரு சம்பவத்தைதான் பாகிஸ்தான் செய்துள்ளது. உயர் கமிஷனை அதிகாரபூர்வ அலுவலக செயல்களுக்கு பயன்படுத்தாமல் உளவு பார்க்க பயன்படுத்தி உள்ளனர். அங்கே இரண்டு அதிகாரி ஒரே மாதத்தில் உளவு பார்த்த காரணத்திற்காக வெளியேற்றப்பட்டு உள்ளார்.

உளவு வேலை

'டிராவல் வித் ஜோ' என்ற யூடியூப் பக்கத்தை நடத்தி வந்த ஜோதி மல்ஹோத்ரா எனப்படும் ஜோதி ராணி பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு உள்ளார். டிராவல் யூ டியூபர் என்ற பெயரில் நாடு முழுக்க பல இடங்களுக்கு பயணித்த இவர்.. இந்திய இராணுவத் தகவல்களை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொண்டதற்காக ஹரியானாவின் ஹிசாரில் இவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 'டிராவல் வித் ஜோ மற்றும் 'nomadic Leo girl wanderer' என்ற பெயரில் யூடியூப் சேனல்களை நடத்தி வந்த 33 வயதான அந்த பெண் பாகிஸ்தானுக்கு பல உளவுத்தகவல்களை அனுப்பி உள்ளார்.

பாகிஸ்தான் உயர் கமிஷனில் உள்ள எஹ்சான்-உர்-ரஹீம் என்ற அதிகாரியுடன் பல உளவுத்தகவல்களை இவர் பகிர்ந்து உள்ளார். முக்கியமாக ஜோதி ராணி இரண்டு முறை பாகிஸ்தானுக்கு நேரடியாக விசிட் அடித்ததாகவும் கூறப்படுகிறது. பயண வீடியோ போடுகிறேன் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டு அங்கே பாகிஸ்தான் அரசு அதிகாரிகளை சந்தித்து உள்ளார்.

சமீபத்தில்தான் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர் நாடு கடத்தப்பட்டார். தூதரக நடவடிக்கை அல்லாத வேறு செயல்களில் அந்த அதிகாரி ஈடுபட்டதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் அந்த அதிகாரி யார், அவர் வகித்து வந்த பொறுப்பு உள்ளிட்ட விவரங்கள் அப்போது வெளியாகவில்லை. இந்தியாவின் உத்தரவில் அந்த பாகிஸ்தான் அதிகாரி இந்தியாவால் Persona Non Grata என அறிவிக்கப்பட்டு, 24 மணிநேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில்தான் நாடு கடத்தப்பட்ட அந்த பாகிஸ்தான் அதிகாரி பாகிஸ்தான் உயர் கமிஷனில் வேலை பார்த்த எஹ்சான்-உர்-ரஹீம் என்று தெரிய வந்துள்ளது.

இவர்தான் தூதரக அதிகாரி என்ற பெயரில்.. இந்தியாவிற்குள் உளவு பார்த்துள்ளார். இவருடன் தொடர்பில் இருந்த காரணத்தால்தான் ஜோதி மல்ஹோத்ரா எனப்படும் ஜோதி ராணி பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு உள்ளார். அந்த அதிகாரி வழியாக.. பாகிஸ்தானுக்கு பல உளவுத்தகவல்களை இவர் வழங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+