நாடாளுமன்றம் வெறும் செங்கல் சிமெண்ட் இல்லை பிரதமரே.. “எல்லாம் நானே” என்பதா? சு.வெங்கடேசன் காட்டம்!
டெல்லி : "நாடாளுமன்றம் வெறும் செங்கல் சிமெண்ட் இல்லை பிரதமரே.. ஜனநாயகத்தின் சின்னம். பெண் ஆதிவாசி குடியரசுத் தலைவருக்கு அவமதிப்பு. நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் புறக்கணிப்பு" என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை வரும் மே 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். 64 ஆயிரத்து 500 சதுர அடியில் முக்கோண வடிவில் நான்கு மாடிகளுடன் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. நாட்டின் முதல் குடிமகளான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முதான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

இதனை மத்திய அரசு ஏற்காததால் நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். 19 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ள நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி தான் திறந்து வைப்பார் என உள்துறை அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "பெண் ஆதிவாசி குடியரசுத் தலைவருக்கு அவமதிப்பு.
நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் புறக்கணிப்பு.
நாடாளுமன்றம் வெறும் செங்கல் சிமிண்ட் இல்லை பிரதமரே.. ஜனநாயகத்தின் சின்னம். 19 எதிர்க்கட்சிகளின் கண்டனம் தேசத்தின் குரல்.

அரசியல் சாசன சட்ட விதி 79-ஐ மதிக்க வேண்டாமா? புதிய நாடாளுமன்றத்தின் முதல் பணியே குடியரசுத்தலைவரை அவமதிப்பதா? கட்டிடப்பணியை துவக்கும் பொழுதும், முடிக்கும்போதும் சிங்கத்தின் கோரப்பற்களில் ஜனநாயக மாண்புகளின் குருதி படிவதா? எல்லாம் நானே என்றால் நாட்டில் சட்டங்கள் எதற்கு?" என்று தெரிவித்துள்ளார்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications