டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முன்கூட்டியே முடித்து வைக்கப்பட்டுள்ளது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா இரு சபைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.கடந்த ஜூலை 18-ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடக்க உள்ளது. நாடாளுமன்ற கூட்ட தொடருக்கு முன்பாக இரண்டு முறை இது பற்றி விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.
மொத்தம் 32 மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் 14 மசோதாக்கள் முழு வடிவம் பெற்றுள்ளன. இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெட்ரோல், டீசல் விலை, விலைவாசி உயர்வு, அக்னிபாத் திட்டம், நாடாளுமன்றத்தில் தடை செய்யப்பட்ட வார்த்தைகள் போன்றவை குறித்து எதிர்க்கட்சிகள் விவாதம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசு மூலம் சுரங்கங்கள் மற்றும் மினரல்கள் தொடர்பான மசோதா உள்ளிட்ட பல முக்கியமான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. மேலும் பல மாநில கூட்டுறவு சொசைட்டி மசோதா, கண்டோன்மெண்ட் மசோதா, தமிழ்நாடு, சட்டீஸ்கரில் எஸ்,சி, எஸ்.டி லிஸ்டை மாற்றும் மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன.
Aug 08, 2022, 5:45 pm IST
லோக்சபா, ராஜ்யசபா இரு சபைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
Aug 08, 2022, 4:15 pm IST
நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது மின்சார சட்ட திருத்த மசோதா
Aug 08, 2022, 12:40 pm IST
மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு- லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
Aug 08, 2022, 12:34 pm IST
லோக்சபாவில் மின்சார சட்ட திருத்த மசோதா தாக்கல்
Aug 08, 2022, 12:34 pm IST
லோக்சபாவில் மின்சார சட்ட திருத்த மசோதா தாக்கல்- திமுக கடும் எதிர்ப்பு
Aug 08, 2022, 12:34 pm IST
மின்சார சட்ட திருத்த மசோதாவால் தமிழகத்தில் இலவச மின்சாரத்துக்கு பாதிப்பு- திமுக டி.ஆர்.பாலு
Aug 08, 2022, 12:34 pm IST
மின்சார சட்ட திருத்த மசோசாதா அமலானால் பல லட்சம் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு- டி.ஆர்.பாலு
Aug 08, 2022, 12:34 pm IST
மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் லோக்சபாவில் கடும் எதிர்ப்பு
Aug 08, 2022, 11:43 am IST
முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பற்றி ராஜ்ய சபாவில் பிரதமர் மோடி உரை
Aug 08, 2022, 11:43 am IST
ராஜ்ய சபா சபாநாயகராக வெங்கையா நாயுடு பதவிக்காலம் முடிந்த நிலையில் மோடி புகழாரம்
Aug 08, 2022, 11:43 am IST
இந்த தருணம் மிக மிக உணர்வுபூர்வமானது - மோடி
Aug 08, 2022, 11:42 am IST
வெங்கையா நாயுடு இந்த அவையில் பல சாதனைகளை செய்துள்ளார்
Aug 05, 2022, 11:21 am IST
நாடாளுமன்ற கூட்டத்தொடர்: அமளியால் ராஜ்ய சபா ஒத்திவைப்பு
Aug 05, 2022, 11:21 am IST
காங்கிரஸ் எம்பிக்கள் விலைவாசி உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து அமளி
Aug 05, 2022, 11:20 am IST
காங்கிரஸ் எம்பி மல்லிகார்ஜூன் கார்கே கருப்பு குர்தா அணிந்து வந்து கோஷம்
Aug 05, 2022, 11:20 am IST
கடும் அமளியால் ராஜ்ய சபா 30 நிமிடங்கள் ஒத்திவைப்பு
Aug 04, 2022, 2:27 pm IST
பகல் 2 மணிக்கு லோக்சபா கூடிய போதும் அமளி ஓயவில்லை- சபை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
Aug 04, 2022, 1:19 pm IST
ராஜ்யசபா நடவடிக்கைகளும் பகல் 2 மணிக்கு ஒத்திவைப்பு
Aug 04, 2022, 12:51 pm IST
நாடாளுமன்றம் நடைபெறும் போது எனக்கு அமலாக்கத்துறை சம்மன்: ராஜ்யசபாவில் காங். மல்லிகார்ஜூன கார்கே
Aug 04, 2022, 11:41 am IST
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியால் லோக்சபா நடவடிக்கைகள் பகல் 2 மணிவரை ஒத்திவைப்பு
Aug 04, 2022, 11:24 am IST
எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளியால் ராஜ்யசபா நடவடிக்கைகள் பகல் 12 மணிக்கு ஒத்திவைப்பு
Aug 04, 2022, 11:16 am IST
எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளிக்கு நடுவே லோக்சபாவில் கேள்வி நேரம்
Aug 04, 2022, 11:12 am IST
மத்திய விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதா? விவாதிக்க சிவசேனா கோரிக்கை
Aug 04, 2022, 11:11 am IST
நேஷனல் ஹெரால்டு அலுவலகத்துக்கு சீல்- சபையில் விவாதிக்க காங்கிரஸ் எம்.பி. நோட்டீஸ்
Aug 03, 2022, 3:51 pm IST
லோக்சபா மையப் பகுதியில் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம்
Aug 03, 2022, 12:35 pm IST
தொடர் அமளியால் லோக்சபா நடவடிக்கைகள் பகல் 2 மணிவரை ஒத்திவைப்பு
Aug 03, 2022, 12:12 pm IST
இலங்கையில் சீனா உளவு கப்பல்- ராஜ்யசபாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி
Aug 03, 2022, 11:17 am IST
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியால் லோக்சபா நடவடிக்கைகள் பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டன
Aug 03, 2022, 11:14 am IST
இலவச அறிவிப்புகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க பாஜக கோரிக்கை
Aug 03, 2022, 11:09 am IST
லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளிக்கு நடுவே கேள்வி பதில் நேரம் நடைபெற்று வருகிறது
READ MORE
9:00 AM, 18 Jul
இதில் 14 மசோதாக்கள் முழு வடிவம் பெற்றுள்ளன
9:01 AM, 18 Jul
மொத்தம் 32 மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது
9:01 AM, 18 Jul
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது
9:44 AM, 18 Jul
இன்று காலை பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார்
9:48 AM, 18 Jul
இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசு மூலம் சுரங்கங்கள் மற்றும் மினரல்கள் தொடர்பான மசோதா உள்ளிட்ட பல முக்கியமான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன
9:58 AM, 18 Jul
அக்னபாத் திட்டம், பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்ட வார்த்தைகள் போன்றவை குறித்து எதிர்க்கட்சிகள் விவாதம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
10:03 AM, 18 Jul
இந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் பெட்ரோல், டீசல் விலை, விலைவாசி உயர்வு, குறித்து எதிர்க்கட்சிகள் விவாதம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
10:05 AM, 18 Jul
பாராளுமன்ற கூட்ட தொடருக்கு முன்பாக நேற்று இது பற்றி விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது
10:06 AM, 18 Jul
இன்று தொடங்கும் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடக்க உள்ளது
11:52 AM, 18 Jul
நாடளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதிய எம்பிக்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
எம்பிக்கள் பதவி ஏற்றத்தை தொடர்ந்து லோக்சபா பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது
Parliament Monsoon Session live: Many important bills will be tabled during this sitting. பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. மொத்தம் 32 மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் 14 மசோதாக்கள் முழு வடிவம் பெற்றுள்ளன.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.