முத்தலாக், ஜிஎஸ்டி வெற்றிக்கு ராஜ்ய சபாவே காரணம்.. புகழ்ந்து தள்ளிய மோடி.. நெகிழ்ச்சியான உரை!

முத்தலாக் மசோதா, ஜிஎஸ்டி போன்ற சட்டங்கள் திட்டங்கள் வர ராஜ்ய சபா முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறது என்று பிரதமர் மோடி ராஜ்யசபாவில் பேசி உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முத்தலாக் மசோதா, ஜிஎஸ்டி போன்ற சட்டங்கள் திட்டங்கள் வர ராஜ்ய சபா முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறது என்று பிரதமர் மோடி ராஜ்யசபாவில் பேசி உள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றில் இருந்து டிசம்பர் 13ம் தேதி வரை நடக்க உள்ளது. அதேபோல் இன்று ராஜ்ய சபாவின் 250 அமர்வு நடைபெறுகிறது. ஆகவே இந்த அமர்வு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

இதனால் இன்று நடக்கும் அமர்வில் பிரதமர் மோடி பேசினார். முத்தலாக் மசோதா வெற்றி தொடங்கி பல்வேறு விஷயங்கள் குறித்து மோடி பேசினார்.

முத்தலாக் மசோதா எப்படி

முத்தலாக் மசோதா எப்படி

பிரதமர் மோடி தனது உரையில், எல்லோரும் முத்தலாக் மசோதா வெற்றிபெறாது என்று நினைத்தார்கள்.ஆனால் ராஜ்யசபா முத்தலாக் மசோதாவை வெற்றிபெற வைத்தது.அதுதான் ராஜ்யசபாவின் சிறப்பு.கடந்த 250 கூட்ட தொடர்களில் நிறைய மசோதாக்கள் இங்கு நிறைவேறி இருக்கிறது.

என்ன மசோதாக்கள்

என்ன மசோதாக்கள்

இங்கு நிறைவேறும் மசோதாக்கள்தான் சட்டமாக மாறுகிறது. அதைத்தான் நாம் பின்பற்றுகிறோம். ஜிஎஸ்டி நிறைவேற காரணம் ராஜ்யசபாதான். நாட்டிற்கு ஒரு நல்லது என்றால் கண்டிப்பாக ராஜ்யசபாதான் முன் நிற்கும். அதை நாம் இவ்வளவு நாள் பார்த்து இருக்கிறோம்.

அறிஞர்கள் பலர்

அறிஞர்கள் பலர்

பல அறிஞர்கள், அறிவியல் வல்லுநர்கள், விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள், மருத்துவர்கள் இங்கு எம்பியாக தேர்வாகி இருக்கிறார்கள். அம்பேத்கார் கூட இதற்கு சிறந்த உதாரணம். அம்பேத்காரின் தலைமைதுவம் நமக்கு அப்படித்தான் தெரிந்தது.

அரசியல் இல்லை

அரசியல் இல்லை

அரசியல் சாராத நபர்கள் நாட்டிற்கு உதவ ராஜ்யசபா உதவி இருக்கிறது. ஒரு சமநிலையை, சோதனை தன்மையை ராஜ்யசபா நாட்டில் உருவாக்கி உள்ளது. ராஜ்யசபாவின் இந்த வடிவத்திற்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் முக்கிய காரணம். அதை நாம் மதிக்க வேண்டும்.

முக்கியமான அவையை

முக்கியமான அவையை

ராஜ்யசபா இந்தியாவின் இரண்டாவது அவை. ஆனால் இரண்டாம்பட்சமான அவை கிடையாது. லோக்சபாவிற்கு இருக்கும் அதே மதிப்பும் ராஜ்யசபாவிற்கும் இருக்கும். வாஜ்பாய் எப்போதும் ராஜ்யசபாவை மிக உயர்ந்த அவையாக கருதினார், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு பிரதமர் மோடி தனது உரையை முடித்துக் கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+