இந்தியாவில் பெண்களின் திருமண வயது 21ஆக உயர்கிறதா? வரும் 22 ஆம் தேதி நடைபெறும் முக்கிய ஆலோசனை
டெல்லி: இந்தியாவில் பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்துவது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனை நடத்த உள்ளது. வரும் 22 ஆம் தேதி நடைபெறும் நிலைக்குழு ஆலோசனையில் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். இந்தியாவில் தற்போது ஆண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21 ஆகவும் பெண்ணின் திருமண வயது 18 ஆகவும் உள்ளது.
நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் வரும் 22 ஆம் தேதி நடக்கிறது. காங்கிரஸ் எம்பி திக் விஜய் சிங் தலைமையில் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கியமாக பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்துவது பற்றி ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இது தவிர கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், விளையாட்டு தொடர்பாகவும் இந்த குழு ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக செயலாளர் மற்றும் இளைஞர் குரல் இயக்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் குழு முன்பு ஆஜர் ஆகின்றார்கள். தேசிய பெண்கள் ஆணையம், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும், புதிய கல்வி கொள்கை, சமக்ரா சிக்ஷா அபியான் திட்டம் மற்றும் என்சிஇஆர்டி, கேந்திரிய வித்யாலயா சங்கதன், நவோதயா வித்யாலயா சமிதி உள்ளிட்ட அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
நாட்டில் கடந்த 2006 ஆம் ஆண்டு குழந்தை திருமண தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி, ஆண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21 என்றும், பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 என்றும் நிர்ணயிக்கப்பட்டது. இந்த வயதிற்கு கீழ் திருமணம் செய்தால், அது குழந்தை திருமணம் என்றும், இதற்கு சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இந்த நிலையில், குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்து கடந்த 2021 ஆம் ஆண்டு குழந்தை திருமண தடுப்பு திருத்த மசோதா உருவாக்கப்பட்டது. இந்த மசோதாவில், ஆண்களின் குறைந்தபட்ச திருமண வயதை போலவே பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதையும் 21 ஆக நிர்ணயிக்க வகை செய்தது.
இந்த குழந்தை திருமண தடுப்பு திருத்த மசோதாவானது கடந்த 2021 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த மசோதாவானது நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்விற்கு அனுப்பப்பட்டது. நிலைக்குழுவின் பதவிக்காலமானது நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், ஆய்வானது இன்னும் முடியவில்லை. நடப்பு ஆண்டில் 17வது லோக்சபா பதவிக்காலமும் முடிவடைந்ததால், குழந்தை திருமண தடுப்பு திருத்த மசோதாவானது காலாவதியானது.
இந்த நிலையில் தான் வரும் 22 ஆம் தேதி நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடக்கிறது. மசோதா காலாவதி ஆனபோதிலும், "பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது பற்றி விவாதிப்பதற்கு தடையில்லை என்று அக்குழுவின் உறுப்பினர் ஒருவரே கூறியிருக்கிறார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications