விண்டோ சீட்-க்காக ஸ்பெஷல் கட்டணம் கட்டி புக்கிங்.. கிடைச்சது அந்த சீட்தான்.. ஆனால் அதுலதான் ட்விஸ்டே
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் விண்டோ சீட் வேண்டும் என விரும்பி கூடுதல் கட்டணம் செலுத்தி புக் செய்திருந்த நிலையில், ஜன்னலே இல்லாத இருக்கை தான் அவருக்கு கிடைத்துள்ளது.
டெல்லி: விமானத்தில் ஜன்னல் ஓர இருக்கை வேண்டும் என்று கூடுதல் கட்டணம் செலுத்தி டிக்கெட் புக் செய்த பயணிக்கு துரதிர்ஷ்டவசமாக ஜன்னலே இல்லாத ஒரு இருக்கை கிடைத்துள்ளது. இதனால், நொந்து போன அந்த பயணி தனது கசப்பான அனுபவத்தை ட்விட்டரில் பகிர்ந்து விமான நிறுவனத்திற்கு கேள்வி எழுப்பியிருக்கிறார்.
பயணங்கள் என்றாலே பலருக்கும் அலாதி பிரியம் உண்டு. அதிலும் ஜன்னல் ஓர இருக்கை கிடைத்து விட்டால் போதும். வெளிப்புற அழகை ரசித்துக்கொண்டே பழைய நினைவுகளையும் அசைபோட்டுக்கொண்டு சென்றால் அந்த பயணமே தனி சுகமாக மாறிவிடும்.
பஸ்ஸாக இருந்தாலும் சரி..ரயிலாக இருந்தாலும் சரி..ஜன்னல் ஓர பயணங்கள் பெரும்பாலும் இப்படி சுகமான பயணமாகத்தான் இருக்கும். அதுவும் பிடித்த பாடல்களை கேட்டுக்கொண்டே ஜன்னல் ஓர அழகை ரசித்து சென்றால் அந்த பயணம் எவ்வளவு தொலைவாக இருந்தாலும் மனதளவில் துளி கூட களைப்பு இன்றி இறங்கிவிடலாம்.

தனித்தனியான கட்டணங்கள்
ஜன்னல் சீட்டிற்கு இப்படி ஏகத்திற்கும் கிராக்கி இருப்பதால் ஜன்னல் ஓர சீட்டிற்கு தனிக்கட்டணம் கூட வசூலிக்கப்படுகிறது. நமது ஊரில் ஓடும் ஆம்னி பஸ்களில் கூட இப்படி ஒரே தொலைவிற்கு செல்ல ஒவ்வொரு சீட்டிற்கு ஒவ்வொரு மாதிரியான கட்டணங்களை வசூலிக்கிறார்கள். கடைசி இருக்கை என்றால் ஒரு விலை.. முன்புற சிட் என்றால் ஒரு விலை.. சிங்கிள் சீட் என்றால் ஒரு விலை என தனித்தனியான கட்டணங்கள் வசூலிக்கப்படுவது அடிக்கடி ஆம்னி பஸ்களில் பயணிப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

கூடுதல் கட்டணம் செலுத்தி புக்
பஸ், ரயில் மட்டும் இல்லை விமானத்திலும் கூட ஜன்னல் ஓர இருக்கையைத்தான் பயணிகள் பெரும்பாலும் பிரியப்படுகிறார்கள். வானத்தில் பறந்தபடி பக்கவாட்டில் திரண்டு வரும் பெரும் மேகக்கூட்டங்களை பார்த்துக்கொண்டு செல்லலாம் என்பதால் பயணிகள் விரும்புவதுண்டு.. இதேபோல ஆசையில் தான் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணி ஒருவர் ஜன்னல் ஓர சீட்டை பெறுவதற்காக கூடுதல் கட்டணம் செலுத்தி புக் செய்து இருக்கிறார்.

ஷாக் ஆகிப்போன பயணி
விமானத்திற்குள் வரும்போதே.. அப்பாடா ஒருவழியாக கூடுதல் கட்டணம் செலுத்தினால் கூட ஜன்னல் ஓர இருக்கையை பிடித்து விட்டோம். நிம்மதியாக பயணிக்கலாம் என்ற கனவுகளுடன் உள்ளே விமானத்திற்குள் நுழைந்திருக்கிறார். தனது சீட் எண்னை தேடி பிடித்து அதைப் பார்த்ததும்..பெரும் ஏமாற்றம் தான் மிஞ்சியிருக்கிறது. ஏனென்றால் அவர் புக் செய்த சீட் இரண்டு ஜன்னல்களுக்கு இடையே அமைந்திருக்கிறதே தவிர.. அவரது இருக்கைக்கென பிரத்யேக ஜன்னல் கொடுக்கப்படவில்லை.

விண்டோ சீட் எங்கே?
இதனால் நொந்து போன அந்த பயணியோ.. எல்லாம் தலைவிதி..எ ன்று சொல்லியபடியே டிவிட் ஒன்றையும் தட்டிவிட்டு இருக்கிறார். பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தை டேக் செய்து தான் புக் செய்த விண்டோ சீட்டையும் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். கேப்ஷனாக "எங்கே எனது விண்டோ சீட்?" எனவும் பதிவிட்டு இருக்கிறார். இணையத்தில் இந்த பதிவு வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக அந்த பயணி வெளியிட்டு இருக்கும் ட்விட் பதிவில், "இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இறங்கும் போது அங்குள்ள காட்சிகள் ரம்மியமாக இருக்கும். இதற்காக வலது பக்க விண்டோ சீட்டிற்காக நான் கூடுதல் கட்டணம் செலுத்தினேன். எனது விண்டோ சீட் எங்கே?" என பிரிட்டிஷ் ஏர்வேசை டேக் செய்தும் பதிவிட்டு இருக்கிறார்.

நெட்டிசன்கள் கருத்து
நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். விமான நிறுவனம் உங்களை முழுவதுமாக ஏமாற்றிவிட்டது என்று சில நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர். அதேபோல நாங்களும் பலமுறை இப்படி ஏமாற்றப்பட்டு இருப்பதாக பல நெட்டிசன்களும் தங்கள் ஆதங்கங்களை பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications