ஒரே 2 நேரத்தில் விமானம்.. நடுவானில் ஒரே மாதிரி ஏற்பட்ட சம்பவம்.. உறைந்த பயணிகள்.. என்ன நடந்தது?
டெல்லி: டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு புறப்பட்டு சென்ற ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தின் இரு விமானங்களில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், 2 விமானங்களும் ஆறு மணி நேர இடைவெளியில் மீண்டும் டெல்லிக்கு திரும்பியதால் பயணிகள் பெரும் அவதியடைந்தனர்.
டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி A320 என்ற ஏர் ஏசியா நிறுவனத்தின் விமானம் இயக்கப்பட்டது. டெல்லி விமான நிலையத்திலிருந்து காலை 11.55 மணிக்கு புறப்பட்ட அந்த விமானத்தில் நடுவழியில் தொழிற்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பயணி ஒருவர் கூறுகையில், விமானத்தில் தொழிற்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக விமானி அறிவித்தார். இதனைத்தொடர்ந்து மதியம் 1.45 மணியளவில் பயணிகள் அனவரும் பாதுகாப்பாக டெல்லி விமான நிலையம் வந்தடைந்தோம் என்று தெரிவித்தார்.

பின்னர் அந்தப் பயணிகளை மீண்டும் டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் அழைத்து செல்வதற்காக மாற்று விமானம் ஏர் ஏசியா நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி விடி-ஆர்இடி என்ற பதிவெண் கொண்ட விமானத்தில் பயணிகள் அனைவரும் ஏற்றிச் செல்லப்பட்டனர். மதியம் புறப்பட்ட அந்த இரண்டாவது விமானத்தில் சில மணி நேரத்தில், தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாற்று ஏற்பாடாக புறப்பட்ட விமானமும் மீண்டும் டெல்லி விமான நிலையம் வந்தது. இதில் பயணிகள் யாருக்கும் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. பயணிகளை பாதுகாப்பாக விமான ஊழியர்கள் அழைத்து வந்தனர்.
இதுகுறித்து ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு புறப்பட்டு சென்ற விமானம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் டெல்லி திரும்பியது. தற்போதைய சூழலில், அனைத்து தொழிற்நுட்ப கோளாறுகளும் சரி செய்யப்பட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் புறப்பட்ட விமானத்தில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த பயணிகளின் பயண திட்டங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். பயணிகள் விரும்பினால் பயணத்தை ரத்து செய்துவிட்டு, கட்டணங்களை திரும்பிப் பெற்று கொள்ளலாம் என தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications