தேசிய ஓய்வூதிய நிதி கணக்கீடு மாறுகிறது.. PFRDA-ன் அதிரடி! முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது அவசியம்
டெல்லி: அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதிய முறையான NPS-இன் கீழ், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) தேர்வு செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 30 ஆகும். அதேபோல பென்ஷன் பெறுவோர் தங்கள் வாழ்நாளை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதியும் நவம்பர் 30 ஆகும்.. இந்நிலையில், PFRDA என்று சொல்லப்படும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பென்ஷன் பெறுவோர் ஒவ்வொரு நவம்பர் மாதங்களில் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.. 80 வயதுக்கு மேற்பட்ட அதிமூத்த குடிமக்களுக்கு அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 வரை சமர்ப்பிக்க அவகாசம் உண்டு. அப்படி சமர்ப்பிக்காவிட்டால் ஓய்வூதிய பலனை அவர்கள் இழக்கக்கூடும்.

நவம்பர் மாதம் நடந்துவரும் நிலையில், வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸுக்கு நேரடியாக சென்று சான்றிதழை சமர்ப்பிக்கலாம். பொதுச் சேவை மையத்திற்கு (CSC) நேரில் சென்றும், தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து ஆயுள் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.
டிஜிட்டல் உயிர் வாழ் சான்றிதழ்
அல்லது ஓய்வூதியதாரர்கள் வீட்டு வாசலில் சேவை (Doorstep Banking) மூலம் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். பயோமெட்ரிக் முறையிலும் டிஜிட்டல் உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். இந்தியா போஸ்ட் பேமேண்ட் வங்கி ஊழியர்களிடம் விவரங்களை சொல்லி சமர்ப்பிக்கலாம். இதற்கு கைவிரல் ரேகை பதிவு செய்தாலே போதும்.
ஒருவேளை காலக்கெடுவை தவறவிட்டால், டிசம்பர் மாதம் முதல் உங்கள் ஓய்வூதியம் தற்காலிகமாக நிறுத்தப்படும். நீங்கள் சான்றிதழைச் சமர்ப்பித்த பிறகு, நிலுவையில் உள்ள தொகையுடன் ஓய்வூதியம் மீண்டும் வழங்கப்படும். எனவே 30ம் தேதிக்குள் இந்த பணியை ஓய்வூதியதாரர்கள் முடித்துவிட வேண்டும்.
அதேபோல ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (UPS)ன் கீழ், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) தேர்வு செய்வதற்கான கடைசி தேதியும் நவம்பர் 30 ஆகும். இந்த காலக்கெடு இதற்கு முன்பு நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த விருப்பம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படுவதால், நவம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் தவறினால் டிசம்பர் 1 முதல் இந்த வாய்ப்பு கிடைக்காது என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய ஓய்வூதியம்
இந்நிலையில், PFRDA என்று சொல்லப்படும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
"அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் போது நீண்ட காலத்திற்கு மட்டுமேயான நிதிகளின் முக்கிய நோக்கங்கள் மற்றும் நிகர சொத்து மதிப்பு கணக்கீடுடன் மதிப்பீட்டு வழிகாட்டுதல்களை ஒருங்கிணைப்பது" என்ற தலைப்பில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், "முன்மொழியப்பட்ட கட்டமைப்பானது, நிர்வாகத்தை மேம்படுத்துதல், சந்தாதாரர் நலன்களைப் பாதுகாத்தல் மற்றும் இந்தியாவின் பரந்த நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு பங்களிப்பது ஆகியவற்றில் ஆணையத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும்.அக்டோபர் 17, 2025 தேதியிட்ட ஆலோசனை அறிக்கை, தேசிய ஓய்வூதியத் திட்டம்/ அடல் ஓய்வூதியத் திட்டத்தில் நீண்ட காலம் செல்லுபடியாகும் அரசுப் பத்திரங்களுக்கு இரட்டை மதிப்பீட்டு கட்டமைப்பை ஏற்றுக்கொள்ள முன்மொழிகிறது.
நீண்டகால நிதிநிலைத்தன்மை
இந்த கட்டமைப்பானது நீண்டகால நிதி நிலைத்தன்மை மற்றும் பொருளாதார பொருத்தத்தை உறுதி செய்யும் அதேசமயம், சந்தாதாரர்களுக்கு ஓய்வூதிய செல்வக் குவிப்புகளை இன்னும் தெளிவாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆலோசனை அறிக்கை (PFRDA) பிஎஃப்ஆர்டிஏ இணையதளத்தில் ஆராய்ச்சி மற்றும் வெளியீடு என்ற தேர்வின் கீழ் கிடைக்கிறது. (https://pfrda.org.in/en/web/pfrda/consultation-papers).
தேசிய ஓய்வூதிய திட்ட பங்கேற்பாளர்கள், வருங்கால சந்தாதாரர்கள், ஓய்வூதிய நிதிகள், தொழில் வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களிடமிருந்தும் ஆணையம் இந்தத் திட்டம் குறித்து கருத்துக்களைக் கோருகிறது. தங்கள் கருத்துகளையும், உள்ளீடுகளையும் பங்குதாரர்கள் நவம்பர் 30, 2025-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications