லட்சத்தீவுகளில் இல்லாத அழகா? இத்தனை அவமானத்திலும் மாலத்தீவில் வீடியோவா.. நடிகை பிபாஷாவுக்கு கேள்வி
டெல்லி: மாலத்தீவுகளில் நடிகை பிபாஷா பாசு போட்டோ ஷூட் நடத்தி வீடியோ வெளியிட்டதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர், நடிகைகள் மாலத்தீவுகளுக்கு சுற்றுலா செல்வதை விரும்புகிறார்கள், ஷூட்டிங் இல்லாவிட்டால் அந்த நாடுகளுக்கே படையெடுக்கிறார்கள். அது போல் அங்கு போட்டோஷூட் நடத்தியும் படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுகிறார்கள்.

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத்தீவுகள் பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் தெரிவித்திருந்த கருத்துகள் பெரும் சலசலப்பை கிளப்பியிருந்தன. இதனால் மாலத்தீவுகளை புறக்கணிக்க நடிகர்களும் நடிகைகளும் குரல் எழுப்பி வருகிறார்கள்.
அந்த வகையில் ரன்வீர் சிங், சல்மான் கான், அக்ஷய்குமார், கங்கனா ரணாவத் உள்ளிட்டோர் சமூகவலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் தனது 45 ஆவது பிறந்தநாளை கொண்டாட மாலத்தீவுகளுக்கு சென்றுள்ளார் ஹிந்தி நடிகை பிபாஷா பாசு.
அங்கு நீச்சல் உடை அணிந்து கொண்டு புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்த இந்திய திரையுலகமே மாலத்தீவு பயணத்தை புறக்கணிக்க வேண்டும் என கூறி வரும் நிலையில் மாலத்தீவுகளுக்கும் அந்த நாட்டு அமைச்சர்களின் கருத்துகளுக்கு ஆதரவளிப்பது போலும் அங்கு போட்டோ ஷூட் நடத்துவதா என பிபாஷாவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் 2,3 ஆகிய தேதிகளில் அரசு முறை பயணமாக லட்சத்தீவுகளுக்கு சென்றிருந்தார். அவர் அங்கு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதில் லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும் அங்கு வாழும் மக்களின் அரவணைப்பையும் கண்டு பிரமிப்பதாக தெரிவித்திருந்தார்.
மேலும் சாகச சுற்றுலா பயணத்தை விரும்புவோருக்கு லட்சத்தீவுகள் மிகச் சிறந்த இடமாகும் என தெரிவித்திருந்தார். இது குறித்து மாலத்தீவு அமைச்சர்கள், மாலத்தீவுகளுக்கு மாற்றாக இந்தியாவின் லட்சத்தீவை மிகப் பெரிய சுற்றுலாத் தலமாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி முயற்சிக்கிறார். மாலத்தீவுகளை இந்தியா குறி வைக்கிறது என குற்றம்சாட்டியிருந்தனர். இவர்களுக்கு இந்தியர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர். மேலும் மாலத்தீவுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என்றும் சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள். இது மாலத்தீவு அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications