சட்டசபை தேர்தல்: 5 மாநிலத்திலும் தலா வருமானம் எவ்வளவு தெரியுமா? மிசோரமில் மிக குறைவா? அப்போ முதலிடம்
டெல்லி: ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம் உள்பட சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களிலும் மக்களின் தலா வருமானம் எந்த அளவு உள்ளது என்பதை இங்கு பார்க்கலாம். தலா வருமானம் என்பது ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை மதிப்பிடுவதற்கான முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.
வரும் ஏப்ரல் - மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் உள்ள பாஜக, வரும் தேர்தலிலும் ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்து வருகிறது. அதேவேளையில் காங்கிரஸ், திரிணாமுல், தேசியவாத காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் பாஜகவை வீழ்த்தும் ஒரே நோக்கத்துடன் "இந்தியா கூட்டணி" என்ற பெயரில் ஒருங்கிணைந்துள்ளன.

லோக்சபா தேர்தலுக்கு முன்பாக அரையிறுதி போல தற்போது ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஷ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில், சத்தீஷ்கரில் முதல் கட்டமாக 20 தொகுதிகளுக்கும் மிசோரத்திலும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ராஜஸ்தானில் வரும் 25 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
தலா வருமானம்: மத்திய பிரதேசத்தில் வரும் 17 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தெலுங்கானாவில் வரும் 30 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை வரும் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்படுகிறது. ஐந்து மாநிலங்களில் மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. தெலுங்கானாவில் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
மாநிலம் வாரியாக: இதனிடையே, தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களிலும் 2020 - 21 முதல் 2022 - 23 ஆண்டு வரையில் தலா வருமானம் என்று அழைக்கப்படும் மக்களின் தனி நபர் வருமானம் எந்த அளவு உள்ளது என்ற விவரங்களை பார்க்கலாம். தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களிலுமே தலா வருமானம் கடந்த முறையை விட தற்போது அதிகரித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் ரூ.1,03,654 ஆக இருந்த தலா வருமானம் ரூ.1,40,583 ஆக உயர்ந்துள்ளது.
சத்தீஷ்கரில் ரூ.1,04,788 ல் இருந்து ரூ.1,33,989 ஆக தலா வருமானம் உயர்ந்துள்ளது.
ராஜஸ்தானில் ரூ.1,15,122ல் இருந்து ரூ.1,56,149 ஆக தலா வருமானம் அதிகரித்துள்ளது.
தெலுங்கானாவில் ரூ.2,25,687-ல் இருந்து ரூ. 3,08,732 ஆக உயர்ந்துள்ளது.
மிசோரமில் குறைவு: மிசோரம் மாநிலத்தில் தான் குறைந்த அளவு உயர்ந்துள்ளது. 2020-21 ஆம் ஆண்டில் 1,87,838 ஆக இருந்த தலா வருமானம் ரூ.1,88,839 ஆக உயர்ந்துள்ளது. எனினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை மிசோரம் அரசு வெளியிடவில்லை.
தலா வருமானம் என்பது ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை மதிப்பிடுவதற்கான முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். நாட்டின் தலா வருமானம் 2011-12 ஆம் ஆண்டில் 72,805-ஆக இருந்தது. 2022-23 ஆம் ஆண்டில் 98,374ஆக உயர்ந்துள்ளது. தலா வருமானம் என்பது ஓராண்டை மட்டும் குறிக்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications